பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர்.அ.ச.ஞானசம்பந்தன் 301 பாய்ந்து அப்படியே குத்தி நின்றமையின், பொன்மயமான மேருமலையின்மேல் ஆயிரக் கணக்கான குருவிகள் ஒரே நேரத்தில் வந்து அமர்ந்ததைப் போல ஒரு காட்சி தென்பட லாயிற்று. முர்ச்சையுற்ற நிலையில் அனைவரும் கிடக்க, அனுமன்மட்டும் ஒரளவு மயக்கம் தெளிந்தவனாய், நடந்தது இன்னது என அறிந்துகொள்ள முயல்கிறான். களத்தின் மற்றோர் இடத்தில், இராகவன் போருக்கு வேண்டிய தெய்வப்படைகளை வைத்துப் பூசனை செய்தான். பூசை முடிந்தவுடன் அவற்றை எடுத்துக்கொண்டு களத்தில் புகுந்த இராகவனுக்கு அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது. தம்பிமுதல் அனைவரும் மூச்சுப்பேச்சின்றி அம்புகளால் துளைக்கப்பட்ட உடம்புடன் இருத்தல் கண்டு கதறி அழுதான். நான்முகன் படையால் கவரப்படாத வீடணனும், கவரப்பட்டு மயக்கம் தெளிந்த அனுமனும் உரையாடிக் கொண்டு, சாம்பனைத் தேடிச் செல்கின்றனர். சாம்பனின் அறிவுரை கேட்டு, அனுமன் மருத்துமலையைக் கொணர, அனைவரும் மயக்கம் தீர்ந்து எழுந்தனர். அவர்கள் செய்த மகிழ்ச்சி ஆரவாரம் இராவணன் அரண்மனைவரைச் சென்று தாக்கிற்று. . மருத்துமலைப் படலத்தில், இலக்குவன் முதலானவர்கள் உயிர் பெற்று எழுந்தகைக் கூறி முடிக்கின்றான் கம்பன் என்றாலும், இந்நிகழ்ச்சி நடைபெறுவதற்கு முன்னர் நடைபெற்ற, சீதை களத்தைக் காணும் பகுதி பேசப்பெறுகிறது. மருத்துமலைப் படலத்திற்குமுன் உள்ள இப்படலம், பிராட்டியின் துயரத்தை, இமயத்தின் உச்சிக்கே கொண்டு செல்கிறது. கும்பகர்ணன் இறந்தான் என்று கேள்விப்பட்ட பிராட்டி உள்ளே கிளுகிளுத்தாள் (7718 என்று பேசுகிறான் கம்பன். சிறை எடுக்கப்பட்டதிலிருந்து, ஆறாத் துயரமும் மகிழ்ச்சியும் மாறி மாறி அவளை ஆட்கொள்ளுகின்றன. உயிரைப் போக்கிக்கொள்ள நினைத்தபொழுது அனுமன் வந்து ஆறுதல் சொன்னான். போர் நடைபெறும் பொழுது முடிவு என்ன ஆகுமோ என்று அஞ்சி இருந்த அவளுக்கு, கும்பன் மடிந்தான் என்ற செய்தி உள்ளத்தில் கிளுகிளுப்பை