பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

302 கம்பன் எடுத்த முத்துக்கள் உண்டாக்கிற்று, பிரம் மாத்திரத்தால் தாக்குண்டு இறந்தவர்போல் கிடக்கின்ற இலக்குவன் அனுமன் முதலானோரைப் பார்த்தபொழுது, இனித் தனக்கு விமோசனமே இல்லை என்ற முடிவுக்கு வந்து, பிராட்டி துயரத்தின் என்லையை அடைந்தாள். துயரமும் மகிழ்ச்சியும் மாறி மாறி வர, இறுதியாக அவள் உடைந்தே போகும் நிலை, பிராட்டி அடைந்த ஆறாத் துயரம் இந்திரசித்தனுக்கும், இராவணனுக்கும் மகிழ்ச்சியைத் தந்திருக்கும் என்பதில் ஐயமில்ல்ை. மயங்கிக் கிடப்பவர்களைப் பிராட்டி காணவேண்டும் என்று நினைத்த அரக்கன், லட்சக் கணக்கில் இறந்துகிடக்கும் அரக்கர் படையை அவள் காணக்கூடாது என்று, இறந்த அரக்கர் சடலங்களை யெல்லாம் கடலில் விட்டு விடுகின்றனர். பிராட்டி களத்தைக் காணும்பொழுது இறந்து பட்ட அரக்கர் சடலம் ஒன்றைக்கூட அவள் காணவில்லை. மயங்கிக் கிடந்த அனைவரும் வானரப் படையினரே ஆவர். இறந்த அரக்கர்களின் சடலங்களைக் கடலில் இட்டது அரக்கர்களின் புத்திக்கூர்மை என்றாலும், அதனால் விளையப்போகும் பயனை அப்போது அவர்கள் உணரவில்லை. மருத்துமலையை அனுமன் கொண்டு வந்தபொழுது, களத்தில் இறந்துகிடந்த அத்துனைப் பேரும் மீட்டும் உயிா பெற்றனர். இறந்தவாகளை உயிர்ப்பிக்கும் மருத்துமலை, வானரர், அரக்கர் என்று பிரித்துப் பார்க்க போவதில்லை. இறந்த அரக்கர்கதளின் சடலங்கள் அங்கே கிடந்திருந்தால், அவைகளும் உயிர்பெற்றிருக்கும். தங்கள் பெருமையைச் சீதைக்குக் காட்ட அரக்கர் செய்த சூழ்ச்சிக்கு, அவர்களே பலியானார்கள். இந்த துணுக்கமான விஷயத்தை அறிந்த கம்பநாடன், சீதை களம் காணப் புறப்படுவதற்கு முன்னேயே அரக்கர்கள் சடலங்கள் அப்புறப்படுத்தப்பட்டன என்று கூறுகிறான். காப்பியப் புலவனின் நுண்மாண் துழைபுலத்திற்கு இதுவும் ஓர் எடுத்துக்காட்டாகும். அடுத்தப்படியாக, நாம் இந்திரசித்தனைச் சந்திப்பது நிகும்பலை யாகத்திலாகும். அந்த யாகம் முற்றுப்