பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர்.அ.ச.ஞானசம்பந்தன் r - 303 பெற்றிருப்பின், இந்திரசித்தனை வெல்லமுடியாது என்று எடுத்துச்சொன்ன வீடணனின் அறிவுரையைக் கேட்டு இராகவன், திருமாலின் வில்லையும், அம்பறாத்துணியையும் இலக்குவனிடம் தந்து, நிகும்பலை யாகத்தை அழிக்க அனுப்புகிறான். நிகும்பலை யாகம் இந்திரசித்தனுக்கு மட்டுமே அல்லாமல், இராம, இலக்குவர்க்கும் ஜீவ மரண போராட்ட மாகும். வேள்வி முடிந்தால் இந்திரசித்தனுக்கு வெற்றி கிட்டும். இராம, இலக்குவர்கள் தப்பிக்க வேண்டுமானால், வேள்வியை முடிக்காமல் செய்ய வேண்டும். இதன் முக்கியத்துவத்தை அறிந்துகொண்ட இலக்குவன் மனத்தில் எப்பாடு பட்டாவது நன்மை தீமைகளைச் சீர்துக்கிப் பார்க்காமல் அந்த வேள்வியை அழிக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி நின்றது இயல்பே ஆகும். அவன் மனக் கருத்தை அறத்தின் மூர்த்தியாகிய இராமன் எளிதில் புரிந்துகொண்டு, நிகும்பலையை அழிக்கப் புறப்பட்ட இலக்குவனுக்குச் சில அறிவுரைகள் கூறுகின்றான். ஜீவ மரணப் போராட்டமே ஆயினும் , வில் அறம்துறந்து போர் செய்வதை விழைந்திலன் இராகவன். எனவே, தம்பியை நோக்கி, இளையோய்! இந்தத் திருமால் வில்லையும், அம்பறாத்துணியையும் நீ இப்பொழுது பெற்றுக்கொள்வாயாக, தெய்வப் படைகள் இத்துணியில் உள்ளன என்றாலும் அயன் படை, முக்கணான் படை, ஆழிமுதல்வன் படை இவற்றை எக்காரணம் கொண்டும் நீ முதலில் எய்யாதே. அவன் இவற்றைப் பயன்படுத்தினால், உன்னைக் காத்துக்கொள்வதற்குமட்டும் இவற்றைப் பயன்படுத்த வேண்டுமே தவிர, நீ இவற்றை முதலில் எய்ய வேண்டாம். எய்தால் தேவையில்லா உயிர்களும் மாளும். அத்தகைய தவற்றை எது கருதியும் செய்யற்க” ( - 8936, 8937), மிக முக்கியமானதும், தாமா? அவர்களா? என்ற முடிவைத் தருவதும் ஆகிய இந்தச் சந்தர்ப்பத்தில்கூடச் சக்கரவர்த்தித் திருமகன் அறத்தினின்று வழுவத் தயாராக இல்லை. இராமனுடைய பண்பாட்டிற்கு உச்ச நிலையைக் கவிச்சக்கரவர்த்தி இங்கே அமைத்துக் காட்டுகிறான். சாதாரண நிலையில் அறத்தைக் காப்பது என்பது உயர்ந்த நிலையில் உள்ள ஒரு சிலர் செய்யக் கூடியதே ஆகும்.