பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

304 கம்பன் எடுத்த முத்துக்கள் இப்பொழுது நிலை முற்றிலும் வேறுபட்டுவிட்டது. அரக்கர்களை அழித்து உங்களைக் காக்கிறேன்' என்று முனிவர்களுக்குத் தந்த வாக்குறுதியும் கோதண்டம் கையில் இருப்பவும் மனைவியைப் பறிகொடுத்தான் என்ற அவப் பெயரைப் போக்கிக்கொள்ளுவதற்குரிய சந்தர்ப்பமும் இப்பொழுது எதிரே நிற்கின்றன. இந்திரசித்தனை வென்றால் தான், இவை இரண்டும் கைகூடும். இந்திரசித்தன் அழிய வேண்டுமானால், நிகும்பலை வேள்வி தடைபட வேண்டும். எனவே, இராமனுடைய வாழ்க்கையில் எதிர்ப்பட்டுள்ள மிகப் பெரிய சோதனைக் கட்டமாகும் இது. தான் வாழ்க்கையில் செய்து முடிக்கவேண்டிய அரக்கர் அழிவு, பிராட்டி விடுதலை என்ற இரண்டு குறிக்கோள்களும் எய்தப்படவேண்டுமானால், நிகும்பலை வேள்வி அழிக்கப்பட வேண்டும் என்று வீடணன் கூறிவிட்டான். இராமனை அல்லாமல் வேறு யாராக இருப்பினும் - இலக்குவனே தனியாக இருந்திருப்பினும் எந்த வழியை மேற்கொண்டாவது நிகும்பலையை அழிந்திருப்பான். அறத்தின் மூர்த்தியாகிய இராகவன், எந்த நிலையிலும், எக்காரணம் கொண்டும், எந்த வெற்றியைக் கருதியும் அறவழியினின்று மாறுபட மாட்டான் என்பதை எடுத்துக்காட்ட இப்பகுதி பெரிதும் பயன்படுகிறது. தம்பி இலக்குவனுடைய மனநிலையையும், அ; i ன் எண்ண ஒட்டங்களையும் நன்கு அறிந்துகொண்ட இராமன் இவ்வளவு விரிவாகத் தம்பிக்கு உபதேசம் செய்கின்றான். கம்பனின் பாத்திரப்படைப்புச் சிறப்பையும், அப்பாத்திரங்களின் பண்புநலனை விளக்கும் சூழ்நிலைகள், சந்தர்ப்பங்கள் என்பவற்றை உருவாக்குவதிலும் கம்பனுக்கு நிகர் கம்பனே' என்று சொல்லத் தோன்றுகிறது. நிகும்பலை யாகம் அழிபட்டபோது இந்திரசித்து அனுமன் உரையாடல், இந்திரசித்தன் இலக்குவன் உரையாடல் என்பவை படித்துப்படித்து இன்புறத்தக்கவை ஆகும். அவற்றில் வரும் ஒவ்வொரு வார்த்தையிலும், அவ்வார்த்தைகளைப் பேசும் பாத்திரங்களின் பண்புநலன்கள் வெளிப்படுமாறு உரையாடலை அமைக்கின்றான் கவிஞன்.