பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர்.அ.ச.ஞானசம்பந்தன் 305 நிகும்பலை அழிவுக்குப் பின்னர்த் தெய்வப் படைகள் பலவற்றைச் செலுத்திப் பயன்படாமல் போகவே, தந்தையை நாடிச் செல்கிறான் இந்திரசித்தன். இந்திரசித்து வதைப் படலத்தின் முதல் பத்துப் பாடல்கள், இந்திரசித்தன் வாழ்க்கையில் ஏற்படாத ஒரு மாற்றத்தை அறிவிக்கின்றன. பிரம்மாத்திரம் என்ற படைகள் போக, புதிதாக நாராயணன் படையையும் ஏவிப் பார்த்துவிட்டான், இந்திரசித்தன். உலகம் மூன்றையும் அழிக்க வல்ல படை, இலக்குவனை ஒன்றும் செய்யாததோடுமட்டுமல்லாமல், அவனை வலஞ்செய்து போயிற்று (919) என்பதைப் பார்த்தவுடன் இந்திரசித்தன் மனத்தில் பெருமாற்றம் ஏற்பட்டது. இந்திரன் பகைஞன் என்றும், இராவணன் மைந்தன் என்றும் வீறுடன் பேசித் தன்னை வெல்லவல்லார் இவ்வுலகிடை யாரும் இல்லை என்று தருக்கி இருந்த இந்திரசித்தன், நாராயணப் படை ஏவியவுடன் அது இலக்குவனை வலம் செய்துப் போவதைக் கண்டான். இந்த நிகழ்ச்சி அவன் கர்வத்தை அழித்ததோடல்லாமல் இதுவரை அவன் சிந்தனை செய்யாத பேராற்றல் ஒன்று மேலே இருந்துகொண்டு இங்குள்ளோர் அனைவரையும் இயக்குகிறது என்பதை முதன்முதலாக உணரத் துவங்கினான். மக்கள், தேவர், நரகர், அசுரர் முதலிய அனைவரையும் வென்றாலும், அந்த மாபெரும் ஆற்றலின் எதிரே இந்த வெற்றிகள் அர்த்தமற்றவையாகி விடுகின்றன என்பதை உணர்ந்த இந்திரசித்தன் முற்றிலும் மனம் மாறிய நிலையில் இதுவரை செய்யாத செயலைச் செய்யத் துவங்குகிறான். r இராவணன் மைந்தனாகிய அவன் இன்றுவரை தந்தையை எதிர்த்துப் பேசி அறியாதவன். தான் தெய்வமாக வணங்கும் அத்தந்தையின் செயல்களை ஆராய்வது தன் கடம்ை அன்று என்று வாழ்ந்தவனாகிய அவன் இப்பொழுது மனம் மாறுகிறான். எல்லாவற்றையும் இழந்த இந்த நிலையில் தந்தையையாவது, இறுதியில் காப்பாற்ற வேண்டும் என்று நினைக்கிறான். இந்த மனஉறுதியுடன் தந்தையிடம் செல்கிறான். . - 20