பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர்.அ.ச.ஞானசம்பந்தன் 309 கொள்வானோ என்று கருதினான். ஆனால் நடந்தது வேறு. நாராயணப் படை இலக்குவனை வலஞ்செய்து செல்வதைக் கண்ட இந்திரசித்தன் மலைபோன்ற தன்னம்பிக்கையை இழந்து விட்டான். "வில்லாளரை எண்ணில் விரற்கு முன் நிற்கும்" வீரனாகிய இந்திரசித்தன் இனிச் செய்யக் கூடியது ஒன்றுமில்லை என்ற முடிவிற்கு வருகிறான். தன்னால் ஒன்றும் செய்யமுடியாதென்றால், தன் தந்தையாலும் ஒன்றும் செய்ய முடியாதென்ற முடிவிற்கு வந்துவிட்டான். எனவே, தந்தையையாவது காப்பாற்றலாம் என்ற எண்ணத்தில்தான். 'சீதையை விடுக, விட்டால் போதலும் புரிவர், செய்து பிழையையும் பொறுப்பர் என்று கல்லும் கரையும் முறையி: பேசினான். ஆனால், அச்சொற்கள் செவிடன் காதில் ஊதிய சங்காக முடிந்துவிட்டது. - இராவணன். இத்துணைத்துரம், மகன் அனுபவத்தின் உதவியால் பேசிய பேச்சுக்களைக் கேட்ட இராவணன், அதை ஏற்காமல் தற்பெருமை பேசுகிறான். இந்திரசித்தனை நோக்கி, இராவணன் கூறும் சொற்கள் ஆறு பாடல்களில் இடம்பெறுகின்றன. இந்த ஆறு பாட ன் இராவணனின் தன்னம்பிக்கை, மனநிலை, அவன் ஆழ்மனத்தில் உள்ள எண்ணங்கள் ஆகியவற்றை வெளியிடுபவையாக அமைந்துள்ளதைக் காணலாம். அவன் பேசும் முதற்பாடல், மகனுடைய அருமை பெருமை தெரியாத அவனை எள்ளி நகையாடுவது போல் அமைந்துள்ளது. "மகனே! பட்ட வருத்தத்தால் போரினை விட்டுவிட வேண்டும் என்று நீ நினைப்பதாகத் தெரிகிறது. கவலை வேண்டாம். அந்த மனிதர்களை என் வில் ஆற்றலால் கொன்று வெற்றிக் கனியை உனக்குத் தருவேன்” 19122) என்கிறான். அடுத்து, "மகனே! இப்போரின் தொடக்கத்திலிருந்து இறந்தவர்க ளாகிய அவர்கள், போருக்குச் சென்று என் பகையை முடிப்பார்கள் என்றோ, இப்பொழுது உயிருடன் இருந்து இனிப் போருக்குச் செல்லப்போகிறவர்கள் வெற்றியைத் தருவார்கள் என்றோ, மாவீரன் ஆகிய நீ