பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

310 - . கம்பன் எடுத்த முத்துக்கள் அவர்களை வென்று எனக்கு வெற்றியைத் தருவாய் என்றோ நான் கருதவில்லை. இப்பகைமையைத் தேடிக்கொள்ளும் பொழுது, இந்த மூன்று பிரிவாரும் உதவுவார்கள் என்று நான் நம்பவில்லை. என்னையும் என் ஆற்றலையும் என் வில்லாற்றலையும் வர பலங்களையும் சிந்தித்துத்தான் என் பகையை நானே தேடிக்கொண்டேன்" (9123) இந்த இரண்டு பாடல்களில் உள்ள கருத்துக்களை, சொற்களை இராவணன் பேசிக்கொண்டிருக்கும் பொழுதே அவன் அகமனத்தில் ஒரு போராட்டம் நிகழ்கிறது. இந்திரசித்தனைத் தோற்கடித்தவர்களைத் தான் வெல்ல முடியுமா என்பது ஒர் ஐயம்; தன்னோடு சம வலிமை பெற்றிருந்த கும்பனை வெற்றிபெற்றவர்களைத் தான் வெல்ல முடியுமா என்பது மற்றோர் ஐயம். போர்க்களத்திற்குச் செல்லும் கும்பகர்ணன், “என்னை வென்று உளர். எனில் இலங்கை காவல! உன்னை வென்று உயருதல் உண்மை; ஆதலால் பின்னை நின்று எண்ணுதல் பிழை; அப்பெய்வளை தன்னை நன்கு அளிப்பது தவத்தின் பாலதே" (7368) என்று கூறியதும் இராவணன் மனத்தில் இப்பொழுது நினைவுக்கு வருகிறது. கும்பன் போருக்குப் புறப்படுமுன் இதைக் கூறினான். மகன் போரில் ஈடுபட்டுப் பெற்ற அனுபவத்துடன் "சீதைபால் விடுதி ஆயின், அனையவர் சீற்றம் தீர்வர்" (912) என்ற அதே கருத்தை வலியுறுத்துகிறான். இந்த அகமணப் போராட்டத்தில், இராவணன் மனத்தில் தான் சுவைக்கப் போவது தோல்வியையே என்ற எண்ணம் உறுதிப்பட்டுவிட்டது. இந்த எண்ணம், இந்திரசித்தனுடன் பேசும்போது அகமனத்தில் அங்குரமாக வடிவு கொண்டு, ஒருசில வினாடிகளில் பெருமரமாக முளைத்துவிட்டது. சுவரில் எழுதிய எழுத்தைப்போல் தன் எதிர்காலம் எத்தகையது என்பதை இராவணன் அறிந்துகொள்கிறான். இப்பொழுது அவனுக்குள்ளவை இரண்டே வழிகள்தான். ஒன்று, பிராட்டியை விடுவித்து, அவர்கள் சீற்றத்தைத் தணித்தல். இவ்வாறு செய்தால் மகனும் அவனும் உயிர்வாழ முடியும். இரண்டாவது வழி, போர் செய்து மடிதலே ஆகும். இந்த இரண்டு வழிகளையும் சீர்தூக்கிப் பார்த்த இராவணன் ஒரு