பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர்.அ.ச.ஞானசம்பந்தன் 311 முடிவுக்கு வருகிறான். முதலாவது, இத்துணைப் பேரும் இறந்தபிறகு உயிர்வாழ்வதில் பயனில்லை. இதுவரையில், அவன் பால் ஓங்கியிருந்த தன் மானம், சீதையை விட்டுவிடுவதால் தேவர்கள் சிரிப்பர் என்ற எண்ணத்தை உருவாக்குகிறத. இதுவரை அவன் பெயரைக் கேட்டு அஞ்சி நடுங்கிய தேவர்கள் எள்ளி நகையாடுவதைப் பார்த்துக்கொண்டு, மானமிழந்து உயிரை வைத்திருப்பது எந்தப் பயித்தியக்காரனும் செய்ய விரும்பாததாகும். அதை மகனுக்கு விளக்கும் முறையில் பின்வருமாறு பேசுகிறான். பேதைமை உரைத்தாய் பிள்ளாய்! உலகு எலாம் பெயர, பேராக் காதை என் புகழினோடு நிலைபெற, அமரர் காண மீது எழும் மொக்குள் அன்ன யாக்கையை விடுவது - அல்லால், சீதையை விடுவது உண்டோ, இருபது திண்தோள் . - உண்டால்" (9124) மகனே! உலகெலாம் அழிந்தாலும், அழியாத என் புகழொடு வாழ்ந்துவிட்டு, நீரில் தோன்றும் குமிழிபோல நிலைபேறில்லாத இந்த வாழ்க்கையை விட்டுச் செல்வேனேயானால், தேவர்களும் என் இறப்பைக் கண்டு போற்றுவார்கள். சீதையை விட்டால், இருபது தோள்கள் இருந்தும் சாரமற்ற வாழ்க்கை வாழ்ந்தான் என்று உலகம் ஏகம். சீதையை விடப்போவ தில்லை என்று பொருள்படப் பேசுவதே இராவணன் கருத்தாகும். இராவணன் மனத்தில் இப்பொழுது எஞ்சியுள்ளது சீதைபால் உள்ள தகாத காமம் அன்று; எஞ்சியுள்ளது மான உணர்ச்சியே யாகும். இந்த எண்ணம் மிக வலுவாக அவனைப்பற்றி யிருந்தது என்பதைப் பின்னரும் காணலாம். முக்கோடி வாழ்நாள் உடைய இராவணன், இன்றுவரை தனக்கும் ஒரு முடிவு காலம் உண்டு என்பதைக் கனவிலும் கருதினான் இல்லை. கார்த்தவீரியனிடம் தோற்றபோதும், வாலியின் வாலில் கட்டுண்டபோதும், கயிலையைப் பெயர்த்தெடுத்தபோதும், அவன் தோல்வியே கண்டான்.