பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

312 கம்பன் எடுத்த முத்துக்கள் இத்தோல்விகளே தன் பெருமைக்கு அடித்தளம் என்ற எண்ணத்தில் வாழ்ந்துவந்தான். ஆனால், இப்பொழுது சுள்ளியில் உறைதரு குரங்கும், இரண்டு மனிதர்களும், தன்னை எதிர்க்கின்றார்கள் என்றால், அது நகைப்பதற்குரியதாகும் என்றே எண்ணிவந்தான். சுள்ளியில் உறைகின்ற குரங்கு, மகன் அக்க குமாரனையும், பஞ்ச சேனாபதிகளையும் பிசைந்து எறிந்தது முதல் அதிர்ச்சியாகும். கும்பகர்ணனும், அதிகாயனும் போரில் பட்டது இரண்டாவது அதிர்ச்சியாகும். வில்லாளரில் முதல்வனாகிய இந்திரசித்தன் சீதையை விடுக' என்று அறவுரை கூறியது மூன்றாவது அதிர்ச்சியாகும். தான் இறப்பது உறுதி என்றவுடன் இரண்டு பொருள்களை அவன் விரும்புகிறான். ஒன்று, இறுதி நேரத்தில் விட்டுக் கொடுக்காமல் போர் புரிந்துமானத்தோடு இறப்பது, அப்படி இறந்தால் அந்த இராமன் பெயர் இருக்கின்றவரை தன் பெயரும் இருக்கும் அல்லவா? அப்படி நிலைபேறுள்ள புகழை அடையத் தன் உயிரைக் கொடுப்பது மிகச் சிறிய விலையாகும். இக் கருத்துப்பட அவன் பேசியதைக் கம்பநாடன் பின்வரும் பாடலில் அமைக்கிறான். " வென்றிலென் என்ற போதும், வேதம் உள்ளளவும், - யானும் நின்றுளென் அன்றோ, மற்று அவ் இராமன் பேர் நிற்கும் - - ஆயின்? பொன்றுதல் ஒரு காலத்தும் தவிருமோ? பொதுமைத்து - அன்றோ? இன்று உளார் நாளை மாள்வர்; புகழுக்கும் இறுதி • * * * உண்டோ? (9125) இலக்குவனும் இந்திரசித்தும் தந்தைக்கும் மகனுக்கும் நடந்த உரையாடலுக்குப் பிறகு, தந்தைக்கு முன்னர்த் தான் போரில் சென்று மடியவேண்டும் என்ற முடிவுடன்தான், போருக்குப் புறப்படுகிறான் இந்திரசித்தன். இம்முறை அவன் இலக்குவனுடன் நிகழ்த்திய போரைக் கண்டு தேவர்களும் . ஏன் இலக்குவன்கூட வியப்பில் ஆழ்ந்து விடுகின்றனர். சிவன் கொடுத்த தேர் முதலியவற்றை அழித்தும், தன்