பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர்.அ.ச.ஞானசம்பந்தன் - 313 சுயவலிமையால்மட்டும் இந்திரசித்தனை வெல்ல முடியாது என்பதை, மும்முறை அவனோடு பொருத இலக்குவன் கண்டுகொண்டான். தன் ஆற்றலைமட்டும் கொண்டு, இந்திரசித்தனை வெல்ல முடியாது என்பதைக் கண்ட இலக்குவன், இறைவனைத் துணைக்கு அழைக்கிறான். தெய்வப்படைகளை ஏவி, ஒன்றும் நடவாதபொழுது அந்தத் தெய்வத்தையே துணைக்கு அழைக்கின்றான் இலக்குவன். இறுதியாக அவன் விட்ட படை தெய்வப்படை அன்று. சாதாரண வீரர்கள் பயன்படுத்தும் பிறைமுகப் பகழியே யாகும். இப்பகழியை ஏவு முன்னர் இலக்குவன் பேசிய பேச்சுக்கள் சிந்திக்கத் தக்கவை. "மறைகளே தேறத் தக்க வேதியர் வணங்கற்பால, இறையவன் இராமன் என்னும் நல் அறமூர்த்தி என்னின், பிறை எயிற்று இவனைக் கோறி என்று, ஒர பிறை வாய் សref நிறை உற வாங்கி விட்டான் - உலகு எலாம் நிறுத்தி - நின்றான். (9166) மறைகளே தேறத்தக்கவன், வேதியர் வணங்கத்தக்கவன் யாராக இருக்க முடியும்? பரம்பொருளாகத்தானே இருக்க முடியும்? அந்தப் பரம்பொருள், நல்லறமூர்த்தியாகி, இராமன் என்ற மானிட சட்டைதாங்கி வந்துள்ளான் என்பது உண்மையானால் இந்தச் சாதாரணப் பிறைமுக வாளி இந்திரசித்தன் கழுத்தைத் துண்டிப்பதாக என்று சபதம் செய்து, எய்த வாளி அக்கடமையைச் செய்துவிட்டது. இராமானுஜன் என்று சொல்லப்படும் இலக்குவன், இராமனின் தம்பி என்றாலும், தம்பி என்ற உரிமையோடு போர் செய்தபொழுது பயன் ஒன்றும் நிற்கவில்லை. ஆனால், இராமானுஜன் என்ற பக்தன், பரம பாகவதனாக நின்று பரம்பொருளைத் துணைக்கழைத்து யான்', 'எனது' என்ற அகங்கார மமகாரங்கள் அடங்கி, இது இறைவன் பணி என்ற நினைவில், ஒரு சாதாரணப் பகழியை ஏவவும், பிரம்மாத்திரம் கூடச் செய்ய முடியாத செயலை, இந்தச் சாதாரண அம்பு செய்துவிட்டது. வேறு படைக்கலங்களைப் பயன்படுத்தி,