பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர்.அ.ச.ஞானசம்பந்தன் . . . 37 நாளன்றும் பூசனை செய்தான் என்று சொல்லவருகின்ற கம்பநாடன்," இருமைக்கு ஏற்ற பூசனை முறையின் செய்து" என்று கூறும்பொழுது, இராவணனுடைய ஆழ் மனம், அகமனம், புறமனம் ஆகிய மூன்றையும் படம்பிடித்துக் காட்டுவதன் மூலம் இராவணன் பெற்ற புதிய சொரூபத்தை எடுத்துக்காட்டுகிறான். ". முக்கோடி வாழ்நாள் வாழ்ந்தவன், மூவுலகம் போற்ற வாழ்ந்தவ்ன் இறப்பு உறுதி என்று அறிந்து, அந்தச் சாவை எதிர்கொள்ளப் போகும்பொழுது எப்படி அமைதியாக இருக்க முடியும்? மனத்தை அடக்கிய பெரியவர்கள்கூட இத்தகைய சூழ்நிலையில் தடுமாற்றம் அடைதல் இயல்பே ஆகும். இந்த நிலையிலும் இருமைக்கு ஏற்ற பூசனையை ஒருவன் எவ்வாறு செய்ய முடியும்? இருமைக்கு ஏற்ற பூசனை என்ற தொடர் இம்மை, மறுமைக்கு ஏற்ற பூசனை என்று பொருள் தருவதுடன், காமிய, நிஷ்காமிய பூசனை என்றும் பொருள்படும். சாகப்போகும் ஒருவன் நிஷகாமிய பூசனை செய்தான் என்றால், அவன் சமதிருஷ்டி பெற்று, ஸ்திதப்பிரக்ளு நிலைபெற்ற ஒருவனாகவே இருத்தல் வேண்டும். நிஷ்காமிய பூசைக்கூட, மனத்தில் ஒரு சலனம் இல்லாமல் சாதாரண காலங்களில் அமைதியாக பூசை செய்தானே அதே போலத்தான் இன்றும் செய்தான் என்பதைக் குறிக்கவே கவிஞன் பூசனை முறையில் செய்து என்று கூறுகிறான். முறையில் என்ற சொல்லினால் பதட்டமோ, கவலையோ, மன உளைச்சலோ, பகைமையோ, காமமோ எதுவுமில்லாமல் மன அமைதியுடன் இருந்தால் தான் முறைப்படி பூசை செய்ய முடியும். இந்த இடத்தில் கவிஞன் இராவணன் இறுதிப் போருக்குப் புறப்படும் நிலையில் இவ்வாறு பூசனை செய்தான் என்று கூற ஒரு காரணமுண்டு. சுற்றத்தார் சுற்றப்பட ஒழுகலுக்கு நேர்மாறாகச் சுற்றத்தார் யாவரும் சாவில் படநேர்ந்த நிலையிலும், தன்னையே நேராகும் தம்பியையும் தனயனையும் இழந்த நிலையிலும் கலக்கத்திற்கு இலக்காகிய நெருக்கடி மிகுந்த அவல நிலையிலும் முறைப்படி பூசனை செய்தான், ஏன் கம்பன் இவ்வாறு கூறுகிறான்