பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

318 கம்பன் எடுத்த முத்துக்கள் என்றால், போர்க்களத்தில் உண்மையில் இராமன் யார் என்பதை இராவணன் அறியமுடிகிறது. "சிவனோ? அல்லன்; நான்முகன் அலலன் திருமாலாம் அவனோ? அல்லன், மெய்வரம் எல்லாம் அடுகின்றான்; தவனோ என்னின், செய்து முடிக்கும் தரன் அல்லன்; இவனோதான் அவ் வேத முதல் காரணன்? என்றான். (9837) இந்த எண்ணம் இராவணனுக்குத் திடீர் என்று தோன்றவில்லை. மகோதரனிடம் இராமன் பெருமையையும், வில்லாற்றலையும் இராவணன் பேசும்போதுகட, இந்த எண்ணம் இருந்ததாகத் தெரியவில்லை. ஒரு சுத்த வீரன், மற்றொரு சுத்த வீரனைப் புகழ்வதாகவே அவ்விடம் அமைந்துள்ளது. இராமனைப் பற்றிய இப்புகழுரைகளை மாமனிடம் பேசுகின்ற அதே நேரத்தில் இராவணனின் ஆழ்மனத்தில், இராமன் பரம் பொருள் என்ற எண்ணம் அங்குரம் போல் முளைவிடுகின்றது. அந்த அங்குரத்திற்கு வித்திட்டவன் அனுமனே ஆவான். பிணி வீட்டு படலத்தில், திரிமூர்த்திகளையும் "புல்லிய வலியினோர்" (5878) என்று பேசிய அனுமன், மூலமும் நடுவும் சறும் இல்லது ஒர் மும்மைத்து ஆய, காலமும், கணக்கும் நீத்த காரணன்" (5884) என்று இராமனைப்பற்றிக் கூறியது மாபெரும் அறிஞனான இராவணன் மனத்தில் அனுமன் இட்ட விதையாகும். இந்த விதைதான், இராவணன் மாமனிடத்தில் பேசும்பொழுது அங்குரமாக முளைத்து, இப்பொழுது இறுதிப்போரில் முழுமரமாக வளர்ந்து, எதிரில் நிற்பவன் வேத முதற்காரணன் என்பதை உணருமாறு செய்கின்றது. இருமைக்கு ஏற்ற பூசனையை மனக்கலக்கம், அவசரம் ஆகியவற்றில் உள்ளவர்கள் செய்யமுடியாது. தெளிந்த மனநிலையில் இராவணன் இருந்தமையால் இராமன் வேத முதற் காரணன் என்று உணர வைக்கின்றது. . - என்றாலும், மெய்யறிவு பெற்றவர்கள்கூடப் பழைய வினைப்பயத்தால் அதனை இழந்துவிடுதல் உண்டு என்பதைப் பல பெரியோர்களின் வரலாறுகள் நமக்கு காட்டுகின்றன. ஆதலால், இந்த வினாடிவரை சமதிருஷ்டியும், மெய்யறிவும்