பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர்.அ.ச.ஞானசம்பந்தன் 3í9 பெற்று, வேத முதற் காரணனை நேரே தரிசித்தும், அவ்வழியில் மேலே தொடரமுடியாதபடி அவனுடைய ஆணவம் தடைசெய்கின்றது. ஆன்மாக்களை மூன்று வகையாகப் பிரிக்கும் சைவசித்தாந்திகள் ஆணவம், கன்மம், மாயை என்ற முக் குற்றங்களையும் உடையவர்கள் சகலர் என்றும், ஆணவம், கன்மம் என்ற இரண்டு குற்றங்களை மட்டும் உடையவர் பிரளயாகலர் என்றும் ஆணவம் மட்டும் உடையவர்கள் விஞ்ஞானகலர் என்றும் கூறுவர். எனவே, மெய்ப்பொருளைத் தரிசனம் செய்துகூட ஆணவத்திலிருந்து விடுபடாமல் - "யாரேனும் தான் ஆகுக! யான் என் தனி ஆண்மை பேரேன்; நின்றே வென்றி முடிப்பென்; புகழ் பெற்றேன்; நேரே செல்லும் கொல்லும் எனில் தான் நிமிர்வென்றி, வேரே நிற்கும்; மீள்கிலேன்' என்னா, விடலுற்றான். - - (9838) ஏனைய குற்றங்களிலிருந்து முழுதும் நீங்கியவனாகிய இராவணன் விஞ்ஞான கலர் என்ற ஆண வத்தின் சொரூபமாகக் காட்சி அளிக்கின்றான். கொண்டது விடாமையும், புகழ் பெறவேண்டும் என்ற விருப்பமும் ஆணவத்தின் பயனாக விளைபவை. என் தனி ஆண் மை பேரேன்; நின்றே வென்றி முடிப்பென்; புகழ்பெற்றேன்; என்று அவன் கூறுவது, இறுதிக் குற்றமாகிய ஆணவத்தின் வெளிப்பாடே ஆகும். - இராவணன் வதைப் படலத்தை அடுத்துக் காணப்படுவது மீட்சிப் படலமாகும். இப்படலத்தில் முக்கியப் பகுதி பிராட்டியின் தீக்குளிப்பு ஆகும். இராகவன் மானின் பின்னே சென்றிருக்கையில் இலக்குவனை மனங் கலங்கிய நிலையில் கடிந்து பேசிவிட்டாள் பிராட்டி என்று சொல்கிறோமே தவிர அவள் பேசியதைக் கூறும் பாடல்கள் அப்படி நினைக்க இடம் தரவில்லை. - 'ஒரு பகல் பழகினார் உயிரை ஈவரால், பெருமகன் உலைவுறு பெற்றி கேட்டும், நீ