பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர்.அசஞானசம்பந்தன் 327 முறையில், விரத நூல் முனிவன் என்ற பாடலை அமைத்துள்ளான். ஆழ்ந்து சிந்திக்க சிந்திக்க இராகவன் என்ற தனிமனிதனுடைய வாழ்வு முழுவதையும் படம்பிடித்துக் காட்டுவதாய் அமைந்திருத்தலைக் காணலாம். - - பெருங்கேடு விளைந்து அசோகவனத்தில் சிறை இருக்கும் பொழுது தான் செய்த பிழை நினைத்து வருந்தினாள் சீதை என்பதை "என்னை இளவலை எண்ணாலா வினையை சொன்ன வாசகங்கேட்டு அறிவிலர் எனத் துறந்தானோ" என்ற பாடலில் கவிஞன் பேசுகிறான். அவளுடைய மனத்தில் இருந்த குற்ற உணர்வைப் போக்கிக்கொள்ளவே தீப்பாயும் நிகழ்ச்சியைக் கம்பன் பாடுகிறான். அடுத்துள்ள விடைகொடுத்த படலத்தில் ஒரு பகுதி நம் மனத்தில் ஆழமாகப் பதிக்க வேண்டிய ஒன்றாகும். அயோத்தி மீண்ட இராகவன் முடி சூடிக்கொண்டு தன்னுடன் இருந்த குகன், சுக்கிரீவன் முதலியோருக்கு தக்க பரிசுகளைக் கொடுத்து விடை கொடுத்து அனுப்புகிறான். இறுதியாக எஞ்சுபவன் அனுமன் ஆவான். அவனுக்கு என்ன பரிசு கொடுப்பதென்று இராமனுக்கே புரியவில்லை. கைம்மாறு கருதாமல் அனுமன் செய்த தொண்டுகளை யெல்லாம் அவ்வப்போது பாராட்டி உள்ளான் இராகவன். மருத்துமலை வந்தபொழுது அனுமனை நோக்கித் தழுதழுத்த குரலில், 'ஐயனே! தசரதன் பிள்ளைகளாகிய நாங்கள் நால் வரும் முன்னரே இறந்துவிட்டோம். இப்பொழுதுள்ள நால்வரும் உன்னிடம் பிறந்த பிள்ளைகளாவோம் என்ற கருத்தில், "நின்னில் தோன்றினோம் நெறியில் தோன்றினாய்” (8812) என்று இராகவன் கூறித் தன் நன்றியைத் தெரிவித்துக் கொண்டான். தந்தையின் ஸ்தானத்தில் இருக்கும் ஒருவனுக்கு எந்தப் பரிசினைத் தந்தாலும் அது குற்றமாகிவிடும். எனவே, இராகவன் அனுமனை நோக்கி, - ? - "மாருதி தன்னை ஐயன் மகிழ்ந்து, இனிது அருளின் . . . நோக்கி, 'ஆர் உதவிடுதற்கு ஒத்தார், நீ அலால்? அன்று செய்த