பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

326 கம்பன் எடுத்த முத்துக்கள் இன்பு அன்பு வாழ்க்கையில்கூட முழுவதுமாக தோய முடியாது. ஒருவன் - ஒருத்தி என்றிருக்கும் பொழுதுதான் அந்த வாழ்க்கை முழுத்தன்மை உடையதாகும். அதிலும் இடையிடையே அரசனுடைய கடமைகள் குறிக்கிடுமாயின் அது முழுத்தன்மைப் பெறாத போக வாழ்க்கையாகும். இந்த எண்ண ஓட்டத்தை மனத்திற்கொண்டு இராமனுடைய வாழ்க்கை எவ்வாறு அமைந்தது. என்று பேசத் துவங்குகிறான் விரத நூல் முனிவன் சொன்ன என்ற பர்டலில், அமைதிய்ான இன்ப வாழ்க்கை என்பது இடையூறு அற்றதாக இருக்க வேண்டும். அதிகாரம் நிரம்பிய அரச வாழ்க்கையும் இன்பம் தருவதுதானே என்று கூறினால் அங்கே ஒரு பிரச்சனை, தோன்றுகிறது. அதிகாரத்தின் ஆணிவேர் நான் என்பதாகும். இந்த நான் பெரிதாக வளர்ந்துள்ள நிலையில்தான் அதிகார வாழ்க்கை அனுபவிக்க முடியும். என்றுமே இராமனைப் பொறுத்தமட்டில் அதிகார வாழ்வில் ஈடுபாடு உடையவன் அல்லன் என்பதைக் காதல் உற்றிலன்; இகழ்ந்திலன்; "கடன் இது என்று உணர்ந்தும். அப்பணிதலை நின்றான் (1382 என்ற பாடலில் கவிஞன் நன்கு எடுத்துக்காட்டியுள்ளான். அரசாட்சி பாரம் எனக் கருதிய இராகவன் மற்றோர். அறத்தின் மூர்த்தியாகிய பரதனிடம் அதனை ஒப்படைத்துவிட்டு தன் தேவியோடு இன்பவாழ்க்கை நடத்தினான் என்ற பாடலின் நான்காவது அடி பேசுகிறது. அதிகாரம், இன்பவாழ்க்கை என்ற இரண்டையும் ஒன்று கலந்ததால் தசரதன் வாழ்க்கை முழுத்தன்மை பெறவில்லை. அவனுடைய இன்பவாழ்க்கையும் அறுபதினாயிரத்தால் வகுக்கப்பட்டபொழுது தன் சிறப்பை இழந்துவிட்டது. அவன் மகனாகிய இராகவன் அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்காமல் முழுவதுமாகத் தக்க பத்திரமாகிய பரதனிடத்தில் தந்து விட்டதால் அக்கவலை நீங்கி விடுகிறது. அவனுடைய இன்ப வாழ்க்கை ஒருத்தியோடு அமைந்ததால் அதுவும் முழுத்தன்மை பெற்றதாகிவிடுகிறது. என்வே, தந்தை செய்ய இயலாத பலவற்றை தனயன் செய்து காட்டினான் என்று சொல்லும்