பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர்.அசஞானசம்பந்தன் 325 தந்துவிட்டு அமைதியான வாழ்வு மேற்கொண்டான் என்ற ஒரு பாடலைக் கவிஞன் கூறுவது நம் சிந்தனையைத் தூண்டுகிறது. அப் பாடல் வருமாறு: - விரத நூல் முனிவன் சொன்ன விதி நெறி வழாமை , “. . - நோக்கி, வரதனும், இளைஞற்கு ஆங்கண்மா மணி மகுடம் சூட்டி, பரதனைத் தனது செங்கோல் நடாவுறப் பணித்து நாளும், கரைதெரிவு இலாத போகக் களிப்பினுள் இருந்தான்

  • * மன்னோ (1033) இப்பாடல் சற்று வியப்பைத் தருவதாகும். முடிசூடிய சில நாட்களிலேயே பரதனுக்கு இளவரசு பட்டம் கட்டவேண்டிய சூழ்நிலை என்ன வந்தது. அறுபதனாயிரம் ஆண்டுகள் ஆட்சி செய்த தயாதன் தன் கண்மணி போன்ற இராமனுக்கு இளவரசு பட்டம் சூட்ட வேண்டும் என்று நினைத்தானே தவிர உண்மையில் தானாக அதிகாரத்தை விட்டுக் கொடுக்க விரும்பியதாகத் தெரியவில்லை. அவனது வாழ்வு முழுவதையும் எவ்வாறு கழித்தான் என்பதை இதோ கம்பன் பேசுகிறான்: - . . . . " . . . . . . . . .

ஈந்தே கடந்தான், இரப்போர்கடல் எண் இல் நூண் நூல் ஆய்ந்தே கடந்தான், அறிவு என்னும் அளக்கர் வாளால் காய்ந்தே கடந்தான், பகைவேலை; கருத்து முற்றத் தோய்ந்தே கடந்தான், திருவின் தொடர்போக பெளவம் . (172) முதல் மூன்று அடிகளோடு, நான்காவது அடியில் கூறப்பட்ட பொருள் இயைபுடையதாகத் தெரியவில்லை. முதல் மூன்று அடிகளில் கூறப்பட்ட கடமைகளை விடாது செய்த ஒருவன் எவ்வாறு அறுபதினாயிரம் மனைவியருடன் இன்ப வெள்ளத்தில் வாழ முடியும் என்ற வினா தோன்றத்தான் செய்கிறது. போகக் கடலில் திளைத்திருந்த ஒருவன் மற்றவற்றில் மனம் செலுத்துவது இரண்டிலும் முழுத் தன்மை பெறாத ஒரு நிலையைக் குறிக்கும். சீவகளின் தந்தை சச்சந்தன் வரலாறு இதற்கு எடுத்துக் காட்டாகும். மேலும் அறுபதினாயிரம் மனைவியருடன் வாழ்கின்ற ஒருவன்,