பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர்.அசஞானசம்பந்தன் 33 சோழ சாம்ராஜ்யம் நானூறு ஆண்டுகள் வாழ்ந்து ஒருவாறு மடிகின்ற காலத்தில் தோன்றியவர் (12ஆம் நூற்றாண்டின் கடைப் பகுதி சேக்கிழார் ஆவார். ஆக, சோழ சாம்ராஜ்யத்தின் தொடக்கத்தில் கம்பனும், அதன் வீழ்ச்சியில் சேக்கிழாரும் இரண்டு பெருங் காப்பியங்களை ஆக்கித் தந்திருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம். - இனி, சோழ சாம்ராஜ்யம் தொடங்குகின்ற காலம் என்றால் பல்லவ சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சிக் காலம் என்பதையும் அறிந்துகொள்ள வேண்டும். அப்போது தமிழ்நாட்டின் நிலை எதுவாக இருந்திருக்கும் என்று சிந்திப்போமேயானால் ஒரு சில எண்ணங்கள் மனத்தில் ஊசலாடுகின்றன. - சமதர்ம சமுதாயத்தைக் கம்பன் படைத்திருப்பதுபோல் முன்னும் இல்லை. பின்னும் இல்லை என்று கூறுகிறோம். அதே நேரத்தில் இப்படி ஒரு கற்பனை அவனுடைய மனத்தில் எப்படித் தோன்றிற்று அன்றைய வரலாற்று நிகழ்ச்சிகள் இதற்கு இடம் தருகின்றன என்று நினைப்பதில் தவறு ஒன்றும் இல்லை. கம்பனுடைய காலத்தில் - அதாவது ஒன்பதாம் நூற்றாண்டில் சமுதாயம் உடையவர்கள், இல்லதவர்கள் என்ற பெரும் பிரிவைக் கொண்டிருந்தது என்பதில் ஐயப்பாடே இல்லை. சங்க காலம் தொடங்கிப் பன்னிரண்டு, பதின்மூன்றாம் நூற்றாண்டு முடியத் தமிழகத்தில் உலகத்தில் வேறு எல்லாப் பகுதிகளிலும் இருப்பதுபோலத்தான் இவ்வேறுபாடு இருந்திருக்கிறது. உடையவர்கள் ஒரு தனிக் கூட்டமாக இருந்திருக்கிறார்கள்; இல்லாதவர்கள் ஒரு தனிக் கூட்டமாக இருந்திருக்கிறார்கள். இல்லாதவர்களில்ே புலவர்களாக, அறிஞர்களாக இருந்தவர்கள் இந்த உடையவர்களை அண்டி வாழ்ந்திருக்கிறார்கள். உடையவர்களும் ஏதோ அந்தப் பெருஞ்சொத்துக்குத் தாங்கள் உரிமைக்காரர்கள் என்ற நினைக்கவில்லை என்று தெரிகிறது. 3