பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 கம்பன் எடுத்த முத்துக்கள் இக்காலத்தில் மகாத்மா காந்தி சொல்லியதுபோலப் பெரும் சொத்துடையவர்கள் அந்தச் சொத்துக்குத் தாங்கள் உரிமையாளர்கள் என்று நினைக்காமல், அதைப் பாதுகாத்துப் பங்கிட வேண்டிய கடப்பாடு உடையவர்கள் என்ற தர்மகர்த்தா முறையில்தான் பழந்தமிழ்ச் செல்வர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. . . "செல்வத்துப் பயனே ஈதல் - துய்ப்பேம் எனினே தப்புந பலவே - (புறம் 189) என்ற புறப் பாடல் மேலே கூறிய கருத்துக்கு அரணாக இருப்பதைக் காணமுடியும். பெரும்பாலான தமிழக மன்னர்களும் குறுநில மன்னர்களும், செல்வர்களும் வாரி வழங்கும் இயல்புடையவர்களாகவே இருந்தார்கள் என்று சங்கப் பாடல்கள் கூறுகின்றன. அப்படி வழங்குவதை ஏதோ பெரிய அறம் என்று கருதாமல் தங்கள் கடமை என்றே கருதினார்கள். இந்த அறத்தைச் செய்வதால் மறுமையில் வீடுபேறு கிடைக்கும் என்று கருதி வழங்கவில்லை. வழங்குவது என்பது அவர்கள் வழக்கமாக இருந்தது. "இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம்எனும் அறவிலை வணிகன் ஆய் அலன் . பிறரும் சான்றோர் சென்ற நெறி என - ஆங்கு பட்டன்றுஅவன் கை வண்மையே (புறம் 134) இதனால் சங்ககால மக்கள் வாழ்க்கை நிலையை ஒரளவு அறிய முடிகிறது. கம்பனுடைய காலத்திலும் அப்படித்தான் இருந்திருக்க வேண்டும். கம்பனுடைய வரலாறு நமக்குத் தெரியவில்லை. ஆனால், அதே நேரத்தில் அவன் தன் காலில் நிற்க முடியாதவனாய், அதாவது அவனுடைய குடும்பம் அவனைத் தனிப்பட்ட முறையில் வாழ வைக்க வாய்ப்பு இல்லாததாக இருந்திருக்க வேண்டும் என்று நினைக்க வேண்டியிருக்கிறது. இல்லாவிட்டால், சடையப்ப வள்ளல் என்ற பெரியதொரு ஆலமரத்தை அண்டித் தன் வாழ்நாளைச் செலவிட்டிருக்க வேண்டிய தழ்நிலை ஏற்பட்டிருக்காது. சஆயப்பரைப்