பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர்.அசஞானசம்பந்தன் 39 நாடென்ப நாடா வளத்தன; நாடல்ல . நாட வளந்தரு நாடு' (திருக்குறள் 739) என்று வள்ளுவப் பேராசான் கூறும்போது நாடா வளத்தன. என்பதற்கு அதிக முயற்சியில்லாமல் பெரும் பயனைத் தரக்கூடியது என்று உரை ஆசிரியர்கள் பொருள் கூறினாலும், மேலும் ஆழமான பொருள் உண்டோ என்ற நினைக்கத் தோன்றுகின்றது. - நாடு என்ற அதிகாரத்தின் முதற் பாடலில் 'தள்ளா விளையுள் பற்றிக் கூறிய வள்ளுவர், அடுத்துத் தக்கார் என்று கூறுவதன்மூலம் இக்கருத்தை வலியுறுத்துகின்றார். விளைச்சல் முதலியவற்றை 1, 2, 6, 8 ஆகிய குறட்பாக்களில் இயற்கை வளம்) பேசிய வள்ளுவர், ஏனைய பாக்களில் மக்கள் (மன) வளத்தையே பேசுகிறார். சிறந்த நாடு மண் வளத்தால் தள்ளா விளையுள் பெற்றிருப்பதுபோல மக்கள் மன வளம் இயல்பாகப் பெற்றிருக்க வேண்டும். அதனைத்தான் நாடா வளம் என்று சொல்கின்றாரோ என்றுகூட நினைக்கத் தோன்றுகிறது. எத்துணை வளம் இருப்பினும் மக்கள் மனவளம் இல்வழி அது பயனற்றதாகும் என்று கருதிய தமிழர் அந்த இயற்கை வளத்துக்குக்கூட மக்கள் மனவளமே காரணம் என்று கருதினதாக நினைக்க முடிகிறது. 'சாலி நெல்லின் சிறைகொள் வேலி ஆயிரம் விள்ையுட்டு ஆகக் காவிரி புரக்கும் நாடு கிழவோனே (பொருநர். 246-8) இவ்வடிகள் இவ்வாறு நினைக்கத் தூண்டும். ஆக என்ற வினையெச்சம் புரக்கும்' என்ற பெயரெச்சத்தோடு இயைவதைப் பார்த்தால், இந்த விளைச்சலுக்குக் காரணம் சோழனுடைய ஆட்சிச் சிறப்பே என்று ஆசிரியர் பெற வைக்கிறார். என்பது தெரிகிறது. - இக்கருத்துகளை யெல்லாம் நன்கு ஜீரணித்துக்கொண்ட கம்பநாடன், சங்கப் புலவர்களும் ஏனையோரும் காணாத