பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 கம்பன் எடுத்த முத்துக்கள் ஒரு கற்பனை நாட்டை - 15, 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தாமஸ் மூர் காண முயன்ற நாட்டைப் படைக்க முயல்கிறான். நாட்டின் சிறப்பைக் கூறும்பொழுது மண்வளத்தைவிட, மக்கள் மனவளத்தைப் பெரிதாகப் பாடிய புறப்பாடலோ, திருக்குறளோகூட, கம்பன் மக்களின் தலையாய பண்பு என்று முதல் பாட்டிலேயே, பெரிதாகப் போற்றும் ஒரு பண்பைச் சுட்டிக் காட்டியதாகத் தெரியவில்லை. உட்பகையின்மை, மடியின்மை, பெருமுயற்சி என்பவற்றை அடிப்படைப் பண்புகளை நாட்டு ம்க்களின் இலக்கணமாகக் கூறும் இடத்தில் வள்ளுவர் புலனடக்கத்தை உயர்த்திப் பாடவில்லை. . . ." . . . . - * கம்பனோ நாட்டு வருணனை, மக்கள் வருணனை என்ற இரண்டையும் சொல்லும்போது, நாட்டினுடைய வளத்தைவிட, மக்களுடைய மன வளம் சிறப்பாக இருக்க வேண்டும் என்று நினைந்துச் சொல்கிறான் என்று சொல்லத் தோன்றுகிறது. காரணம், முதல் பாட்டின் முதல் வரியிலேயே மக்கள் மன வளத்தை எடுத்துப் பேசுகிறான். கோசலத்தில், 'ஆசலம் புரி ஐம்பொறி வாளியும் காக அலம்பும் முலையவர் கண் எனும் பூசல். அம்பும் நெறியின் புறஞ் செலாக் கோசலம் புனை ஆற்று அணி கூறுவாம். (12) என்கிறான். எவ்வளவோ வளங்கள் பின்னே கோசலத்துக்குப் பேசப்போகிறான். அவை எல்லாவற்றையும்விட மிகச் சிறந்த வளம் எது என்றால், . . - . 'அம்பு புறஞ் செலாக் கோசலம்' . - என்பதுதான். ஆகவே, மக்களாக வாழப் பிறந்தவர்கள் மிகப் பண்புடையவர்களாக, பொறி, புலன்களை அடக்கி ஆள்பவர்களாக வாழ்வதுதான் அவர்கள் சிறந்தவர்களாக ஆவதற்குரிய அடிப்படையாகும் என்பதை வற்புறுத்துவான் போலப் பேசுகிறான். . . . . வள்ளுவர் காலத்தில் தமிழருடைய நாகரிகமும் வாழ்வு முறையும் மிகச் சிறந்து வளர்ந்திருந்தன என்பதில் ஐயமில்லை.