பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- பேராசிரியர்.அசஞானசம்பந்தன் 41 ஆனால், சமுதாய வாழ்க்கை, நகர வாழ்க்கை என்பவை ஒன்பதாம் நூற்றாண்டில் வளர்ந்திருந்ததுபோல் இரண்டாம் நூற்றாண்டில் இருந்திருக்க வாய்ப்பில்லை. எனவேதான், மெய்யுணர்தல், அவா அறுத்தல் முதலிய அதிகாரங்களை அறத்துப் பாலில், துறவறவியலில் வைத்தாரோ என்று நினைக்கத் தோன்றுகிறது. . . . . . சிறிய கிராமங்கள், ஒரளவு வளர்ச்சி அடைந்த சிறு நகர்கள் என்பவைதாம் சங்க காலத்தில் மிகுதியாக இருந்திருக்க வேண்டும். மதுரை, காவிரிப்பூம்பட்டினம், உறையூர், காஞ்சி போன்ற நகர்கள் விரல் எண்ணிக்கையில் அடங்குவனவாகவே இருந்தன. அதிகப்படியான மக்கள் கூடி வாழும் பெருநகரம், அதனில் இயல்பாகத் தோன்றும் போட்டிச் சமுதாயம் (Competitive Society) என்பவற்றால் விளையும் ஊறுகளைப் பல்லவர் காலத்தை அடுத்து, சோழர் காலத் தொடக்கத்தில் வாழ்ந்த கம்பநாடன் நன்கு அறிய முடிந்தது. - வள்ளுவன் அமைக்காத முறையில், சங்கப் புலவர்கள் கற்பனை செய்யாத வகையில் நாடு, நகர்பற்றிக் கூறத் தொடங்கும் பொழுதே, . . . . . 'பொறிகள் புறஞ்செலா - - மக்கள் வாழ்கின்ற கோசலம் என்று. அமைக்கின்றான். அப்படிப்பட்ட மக்கள் நிறைந்திருந்தார்கள் என்று சொன்னால் - இந்த நாட்டுக்கு வேறு உயர்வு சொல்ல வேண்டிய தேவையே இல்லை. மண்வளம், நீர்வளம், விளைபொருள் வளம், கனிவளம் முதலானவற்றையெல்லாம் பின்னே விரிவாகப் பேசப்போகின்ற கம்பநாடன் எடுத்த எடுப்பிலேயே நம்முடைய கண்ணைத் திறக்கும்படியாக -- அம்பும் நெறியின் புறம் செலாக் கோசலம் - என்று சொல்வதன்மூலம் ஒரு நாடு எப்படி இருக்க வேண்டுமென்று எடுத்துக்காட்டுகிறான் என்று நினைக்க வேண்டியுள்ளது. - -