பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 கம்பன் எடுத்த முத்துக்கள் முதலியன அமைதல் வேண்டும் என்னும் தற்கால மனவியலார். சமுதாய இயலார் ஆகியோர் கூற்றை மெய்ப்பிப்பதுபோல் அமைந்துள்ள பாடல். - 'பந்திணை இளையவர் பயில் இடம் - மயில்.ஊர் கந்தனை அனையவர் கலை தெரி கழகம், சந்தன வனம் அல, சண்பக வனம் ஆம் நந்தன வனம் அல, நறை விரி புறவம் (79) என்பதாம். • . இப்பாடலின் முதல் இரண்டு அடிகள் ஆழ்ந்து சிந்திக்கத் தக்கவை. முதல் அடியையும் இரண்டாம் அடியையும் மாற்றிப் போட்டால் தவறில்லை. ஆனால், கம்பன் அமைத்த முறையில் ஒரு சிறப்பு இருப்பதைக் காணமுடியும். கல்வி கற்கத் தொடங்கும் வயதுக்கு முன்னரே, குழந்தைகள் விளையாட்டில் ஆர்வம் காட்டுகின்றனர். உடல் செம்மையாக அமைந்தால் தான் மனம் செம்மையாகும். செம்மையுடைய மனம், சிறந்த அறிவுக்கு நிலைக்களம். அறிவு, உணர்வு என்ற இரண்டும் சேர்ந்தால் ஒழிய மனிதன் முழுத்தன்மை அடையமுடியாது. "கலை தெரி கழகம்” என்று கூறியதால் அறிவு வழிப்பட்ட கலைகளும் (கட்டிடம், சிற்பம்) உணர்வு வழிப்பட்ட கலைகளும் இசை கவிதை முதலியன) ஒருங்கே வளர்க்கப் பட்டன என்பதைக் கவிஞன் வலியுறுத்துகிறான். "பல்லுயில் இடத்தால்" சமுதாய மக்களின் உடல் வளர்ச்சியும், "கலைக் கழகத்தால்" அறிவு, உணர்வு, வளர்ச்சியும் பெறுதலின் அயோத்தி மக்கள் முழுத் தன்மையற்ற முழுமை மனிதர்களாக (FullResonality) வளர்கின்றனர் என்பது குறிப்பதால் இராமன் தோன்ற அயோத்தி சிறந்த இடமாயிற்று. + - பொருந்து கல்வியும் செல்வமும் பூத்த பெருந்தடங்கண் பிறை நுதலார்.(67 பந்து பயிலிடம், கலை தெரி கழகம் - இவை மக்கள் வள்ம், கலம் சுரக்கும் நிதியம், நிலம் பெருக்கும் வளம், நன் மணி சுரக்கும் பிலம் (69) இவை இயற்கை வளம். இத்துணை வளம் இருந்தும் நெறி கடவாதவர்களாய், குறிக்கோள் அழியாதவர்களாய், காதைகள் சொரியும்