பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர்.அ.ச.ஞானசம்பந்தன் 45 செவிநுகர் கனிகளை (82) உண்டு தேக்கெறிகின்ற உயர்பண்பு உடையவர்களாய் அந்நகர மக்கள் வாழ்ந்த காரணத்தினாலே தான் அங்குக் குற்றம் இல்லை; கூற்றம் இல்லை, சிந்தையில் செம்மை உடையவர் ஆகலின் சீற்றம் எழ இடம் இல்லை (70) பல் கேள்வி மேவலான் அவரிடை வெண்மை இல்லை. கீதை கூறும் சம திருஷ்டி வாழ்க்கையை அனைவரும் மேற்கொண்டார்கள் என்று கூறுவதனால் குறிக்கோள் தன்மை பெற்ற ஒரு நாட்டை, அந்நாட்டில் உள்ள நகரத்தை, நகர மக்களை எப்படிப் படைக்க வேண்டும் என்பதனைக் கம்பன் தனக்கே உரிய முறையில் படைத்துக் காட்டுகிறான். இத்தகைய குறிக்கோள் தன்மை பெற்ற நாட்டை, மக்களை, அவர்கள் வாழும் முறையைப் படைத்துவிட்ட கவிஞன் இவ்வனைத்தையும் ஒன்று சேர்த்து இவற்றின் எப்பகுதியிலும் எந்த ஒரு சிறு குறைகூட இல்லை என்று நிலை நாட்ட விரும்புகிறான். - இதுவரை சொல்லிய பகுதிகளில் மக்கள் மனவளம் கூறியிருப்பினும் கோசலம், அயோத்தி மக்களுடைய ஆன்மிக வளம் தனிப்படப் பேசப் பெறவில்லை. எனவே, அதனையும் சேர்த்துச் சொல்ல விரும்பிய கவிஞன் நகரப் படலத்தின் ஆறாம் பாடலில் ஈடு இணையற்ற முறையில் இதனைச் சொல்கிறான். - - - அருள், அறம் என்பவற்றைத் துணைக்கொண்டு, ஐந்தும் அவித்து, பொங்கு மாதவமும் ஞானமும் பெற்றவர்கள் அனைவரும் வாழ்வின் குறிக்கோளாகக் கருதுவது வீடுபேறே ஆகும். (98 - கற்றோர், கல்லார், நல்லார், தீயோர், உடையார், இல்லார் ஆகிய அனைவருக்கும் புகலிடமாக அமைவது செங்கண்மால் திருவடியே ஆகும். - r - - ...”. . அச்செங்கண்மாலே தன் இருப்பிடத்தை வீட்டு இங்கு வந்து பிறந்து அளப்பருங் காலம் வாழ விரும்பினான் என்று கூறுமுகத்தால் குறிக்கோள் தன்மை பெற்ற நாட்டை, நகரத்தைத் தான் அமைத்த முறை சரியானது என்று