பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 கம்பன் எடுத்த முத்துக்கள்) இந்தத் தர்மசங்கடத்தில் அகப்பட்ட இராகவன் மிகச் சிறந்த முறையில் ஒரு முடிவுக்கு வருகின்றான். இதில் தன்னுடைய விருப்பு வெறுப்பு என்பதைக் காட்ட விரும்பாத இராகவன் - கடமை என்ற உணர்ச்சியின்பாற்பட்டு, தான் என்பதைப் புறத்தே தள்ளிவைத்துவிடுகின்றான். மி அற்புதமாகப் பேசுகிறான். ஐயா -

                • **** see: #444 அறன் அல்லவும் எய்தினால், அது செய்க என்று ஏவினால் மெய்ய நின் உரை வேதம் எனக் கொடு செய்கை அன்றோ அறம் செயும் ஆறு (383) 'நிறைவேற்றுவதுதான் என்னுடைய கடமை என்று முடிக்கின்றான். எனவே, தர்ம சங்கடமான நிலை வரும்போது மிக ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு எப்படி இராகவன் முடிவெடுக்கின்றான் என்பதை மிக அற்புதமாக வைத்துக் காட்டுகிறான் கம்ப நாடன். முதன்முதலாக அரச குமாரனாகிய இராகவன் எப்படிப் பிற்காலத்தில் வளரப் போகின்றான், எப்படிப் பிரச்சினைகளைச் சமாளிக்கப் போகிறான் என்பவற்றை நாம் அறிந்துகொள்வதற்கு முதல் வாய்ப்பாகும் இது. - . -

இதற்கு முன்னர் அவன் தனிப்பட்ட முறையில் தானே சிந்தித்துச் செயல்படுகிற எந்தச் சூழ்நிலையும் ஏற்படவில்லை. அப்படி ஒரு சூழ்நிலை ஏற்படும்போது இவன் எப்படி நடந்து கொள்கிறான் என்பதை வைத்துத்தான் இவனுடைய பிற்கால வாழ்க்கை அமையும் என்பதை எடுத்துச் சொல்பவன்போலக் கம்பநாடன் இந்த அற்புதமான காட்சியை நமக்குக் காட்டுகிறான். ஆகவே, இராகவன் இக்கட்டான சூழ்நிலையில் எப்படிச் சிந்தித்துச் செயல்படுகிறான் என்பதைக் காட்டுவதற்குத் தாடகை வதை நமக்கு ஒரு பாடமாக அமைகின்றது. அவனுடைய வளர்ச்சி முறையில் ஒப்பற்ற திருப்பு மையமாக அமைந்துவிடுகிறது தாடகை வதம் என்பதை அறிகின்றோம். இதை ஒரு தொகுப்பாக வைத்துச் சிந்தித்தோம். -