பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர்.அசஞானசம்பந்தன் 49 மறுத்து, மாறுபட்ட தீர்ப்பை வழங்கக் காண்கிறோம். பின்னர் அதுவே முடிவான தீர்ப்பாகிவிடுகிறது. இவ்வாறு மாறுபட்ட தீர்ப்பை வழங்குவதற்குச் சிறப்பான காரணங்கள் இருத்தல் வேண்டும். ஒரு காலத்தில் ஒரு சூழ்நிலையில் இயற்றப்பட்ட சட்டங்களைக் காலம் சூழ்நிலை என்ற இரண்டும் மாறிவிட்டபொழுதும் அச்சட்டத்திற்குப் பழைய பொருளைக் காண்பது பொருத்தமாகாது. எனவே, உச்ச நீதிமன்றம் பழைய சட்டத்திற்குப் புதிய பொருளைக் காண முற்படுகிறது. - பெண்ணின் மேல் அம்பு எய்யக்கூடாது என்பது பழைய சட்டம். அச்சட்டத்தில் பெண் என்பவள் யார் என்ற விளக்கம் தரப்படவில்லை. பெண் உடம்பும் வடிவும் பெற்றவர்கள் எல்லாம் ஒன்றாகவே மதிக்கப்பெற்றனர். பெண் தன்மை அற்ற, கொடுமை நிறைந்த மனமும் செயலும் உடையவர்கள் பெண் வடிவு பெற்றிருந்தாலும் பெண்கள் அல்லர். வடிவு கொண்டு மட்டும் ஒன்றை முடிவு செய்யக் கூடாது என்ற புதிய விளக்கம் விசுவாமித்திரனாகிய உச்ச நீதிமன்றம் வழங்கியதாகும். இந்த விளக்கத்தை தீர்ப்பை இராகவன் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலைக்கு வருகிறான். அத்தீர்ப்பின்படி அவன் நடந்துகொள்ளும்பொழுது அதனால் விளையும் நன்மை தீமைகளுக்கு இராகவன் பொறுப்பாகாமல் விசுவாமித்தி ரனைப் பொறுப்பாக்கிவிடுகிறான். அதனாலேயே "நின்னுரை வேதம் எனக் கொடு" அதன்படி நடத்தலே என் கடமை என்று கூறிவிடுகிறான். - - ; - இங்கு இராமன் தர்மசங்கடமான நிலையில் அகப்பட்டுக் கொள்கிறான். அவன் பரம்பரையில் வந்த, ரத்தத்தில் ஊறிய பண்பாடு பெண்ணைக் கொல்லக் கூடாது என்று சொல்கிறது. எதிரிலே இருக்கிற விசுவாமித்திரன் தாயாக, தந்தையாக, குருவாக, தெய்வமாக மதிக்கப்பட வேண்டியவன் என்று தச்ரதன் கட்டளை இட்டு அனுப்பினான். ஆதலால், இந்த நான்கு இடமும் ஒன்றாக இருக்கிற இந்த விசுவாமித்திரன் இப்போது கோறி' என்று கட்டளை இடுகிறான். 4