பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 கம்பன் எடுத்த முத்துக்கள் இருந்தது என்று எழுதியுள்ளார். வால்மீகியின் பாடலை, மனத்துள் வாங்கிக்கொண்ட கம்பன் எதிர் வரும் அவர்களை என்ற பாடலை அமைக்கின்றான். ... . . ." . அதற்கடுத்தபடியாக வசிட்டரிடத்தில் கல்வி கற்ற அவன் விசுவாமித்திரரோடு செல்லுகின்றான். அங்கே தாடகை எதிர்ப்படுகின்றான். மிக நீண்ட பரம்பரையிலே சில அடிப்படையான கொள்கைகள், பண்பாடுகள் போற்றி வளர்க்கப்படுகின்றன. அவற்றுள் ஒன்று தமிழகத்தைப் பொறுத்தமட்டில் 'சுத்தவீரன் பெண்களைக் கொல்லக் கூடாது' என்பதாகும். ந்த மரபில் வளர்ந்தவனாகிய இராகவனுக்குத் தாடகையைக் கொல்வது என்பது நினைக்க முடியாததாக அமைகின்றது. இந்த நிலையில் விசுவாமித்திரன் மிக அற்புதமான பல காரணங்களைக் காட்டி இவள் பெண்ணே அல்லள் - பெண் உருவத்திலுள்ள அர்க்கி என்று எவ்வளவு சொன்னாலும், - 'பெண் என மனத்திடை பெருந்தகை நினைந்தான் (374). இப்போது விசுவாமித்திரன் பேசுகிறான். "ஐயா காழ்ப்புணர்ச்சியோடு, வெறுப்புணர்ச்சியோடு, அவள் மாட்டுக் கொண்ட சின உணர்ச்சியோடு நான் இதைச் சொல்லவில்லை. - 'சீறி நின்று இது செப்புகின்றேன் அலேன்' தர்மம் எது என்பதை நன்கு பார்த்துத்தான் சொல்கின்றேன். - - - - - 'ஈறு இல் நல் அறம் பார்த்து இசைத்தேன் எந்த யோசனையும் வேண்டா . ஆறி நின்றது.அருள் அன்று அரக்கியைக் கோறி (382) எனக் காரணம் கூறி இவளைக் கொல்க என்று கட்டளை இடுகின்றான். i. . . . . . . '. . . . இன்றும்கூடச் சிறிய நீதிமன்றங்களிலிருந்து உச்ச நீதிமன்றம்வரை பல நீதிமன்றங்கள் உள்ளன. ஏன்? மாவட்ட, மாநில நீதிமன்றங்கள் தரும் தீர்ப்பை உச்ச நீதிமன்றம்