பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 - கம்பன் எடுத்த முத்துக்கள். இனி, அடுத்தபடியாக மூன்றாவது பகுதிக்குச் செல்லுகிறோம். கடிமணம் நடைபெறுகிறது. மணத் தம்பதிகள் தசரதனோடு சேர்ந்து அயோத்தி திரும்புகிறார்கள். இராமன், தசரதன் ஆகிய இருவரும் ஒரு தேரில் இருக்கிறார்கள். அந்த நிலையில் ஒரு நிகழ்ச்சி நடைபெறுகிறது. சற்றும் எதிர்பாராத வகையில், உலகம் எல்லாம் கண்டு அஞ்சத்தகுந்த முறையில், பூமி நடுங்குகின்ற முறையில், திக் கஜங்களெல்லாம் கலங்குகின்ற வகையில் பரசுராமன் வருகின்றான். பரசுராமனைப் பற்றி இராகவனுக்கு ஒன்றும் தெரியாது என்பது நன்றாகத் தெரிகின்றது. பரசுராமன் என்றால் யார், எத்துணை ஆணவமும், தவ பலமும் உடையவன், அரசர்களை 21தலைமுறை கருவறுத்தவன் என்பதெல்லாம் தசரதனுக்குத் தெரியுமேயொழிய இராகவனுக்குத் தெரியக் காரணமே இல்லை. வந்த பரசுராமனும் மிகத் தடயுடலாகத் தன்னுடைய ஒவ்வொரு சொல்லிலும் தன்னுடைய ஆணவமும் தவ பலமும் வெளிப்படுகின்ற முறையில் பேசுகிறான். அவனைக் கண்டமாத்திரத்தில் தசரதன் நடுங்கி, அஞ்சி அடைக்கலம் என்று எவ்வளவோ சொல்லியும் அதைப் பரசுராமன் காதில் வாங்கிக்கொள்ளாது. இராமனைப் பார்த்துப் பேசுகிறான். நீ ஒட்டைவில்லை ஒடித்த ஒசை கேட்டு இங்கே வந்தேன். இங்கே நான் உண்மையான வில்லை வைத்திருக்கிறேன்." வல்லையாயின் வாங்குதி தனுவை (1293) என்று சொல்லுகிறான். இந்தக் காட்சி நடைபெறுவதற்கு முன்னர்த் தசரதனுக்கும், பரசுராமனுக்கும் நடைபெறும் உரையாடல்களைப் பார்ப்போமே யானால் வியப்பில் ஆழ்ந்துவிடுகிறோம். இந்த நிலையிலும்கூட இராமன் ஒரு சிறிதும் அலட்டிக்கொள்ளாமல் "யாரோ இவ்ன்" என்கிற ஒரு வினாவோடு நிறுத்திவிடுகின்றான். இப்பொழுது பரசுராமன் நேரடியாக இவனைப் பார்த்து, - 'வல்லையாயின் வாங்குதி தனுவை