பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பராசிரியர்.அசஞானசம்பந்தன் 53 -- - برسد என்று சொல்லும்போது இமயமலைபோல உயர்ந்து நிற்கின்றான் பரசுராமன். ஆணவம், தவபலம், சினம் ஆகியவற்றில் ஈடு இணை இல்லாதவனாக வளர்ந்து நிற்கின்றான். அவன் எதிரே ஒரு சிறிதும் மனக்கலக்கமோ அச்சமோ அல்லது விதிர்விதிர்ப்போ இல்லாமல் இராமன் பேசுகின்ற பேச்சுகள் அவன் யார் என்பதை நமக்கு எடுத்துக் காட்டுகின்றன. “வல்லையாயின் வாங்குதி தனுவை” என்று சொன்னவுடன் அந்த வில்லைக் கையில் வாங்குகிறான். பரசுராமன் என்ன கருத்திலே வாங்குதி என்று சொன்னான் என்றால், இந்த வில்லைக் கையில் வாங்கக்கூட யாருக்கும் தைரியம் இல்லை என்ற எண்ணத்தில், உனக்கு) உடம்பில் பலம் இருந்தால், மனத்தில் தைரியம் இருந்தால் இந்த வில்லைக் கையில் வாங்குவாயாக என்று சொன்னான். வாங்குதி என்ற தமிழ்ச் சொல்லுக்கு இரண்டு பொருள்கள். உண்டு. கையில் வாங்குதல் என்பது ஒரு பொருள். வளைத்தல்' ான்பது மற்றொரு பொருள். - முதல் பொருளில்தான் பரசுராமன் வில்லைக் கொடுத்தான். ஆனால், பெற்ற இராமன் இரண்டாவது பாருளும் வெளிப்படுகின்ற முறையிலே வில்லை. வளைத்துவிட்டான். வில்லை வளைத்ததுமட்டு மன்று, வளைத்து நாணேற்றி இறுதியாகப் பேசத் தொடங்குகிறான். இராமன் பரசுராமனிடம் பேசிய நீண்ட தொடர்கள் இவைதாம். : 'பூதலத்து அரசை எல்லாம் பொன்றுவித்தனை ஆகவே மற்றொரு அரசனாகிய நான் உனக்குத் தண்டனை. கொடுப்பது தகுதியாகும். பூதலத்து அரசை எல்லாம் பொன்று பித்தனை என்பது முதல் வாக்கியம். ஆகவே, தண்டிப்பதற்கு ான் உரிமை உடையவன் என்பது ஒரு பொருள். இனி அடுத்தபடியாக, வேத வித்து ஆய மேலோன் மைந்தன் என்பதாலும் நீ விரதம் பூண்டாய் என்பதாலும் கால்லல் ஆகாது என்ற இந்த வாக்கியங்களில் இராமனுடைய உயர்வையும், பரசுராமனுடைய மனப் ான்மையையும் நாம் அறிந்துகொள்ள முடிகின்றது.