பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 கம்பன் எடுத்த முத்துக்கள்\ இதே கருத்தை அனுமன் கூற்றாக வைத்துப் பின்னர் ப கை வில் ஏந்தி, - சூலமும் திகிரி சங்கும் கரகமும் துறந்து தொல்லை ஆலமும் மலரும் வெள்ளிப் பொருப்பும் விட்டு . . . . . - அயோத்தி வந்தான் என்ற பாடலில் விளக்கமாகக் கூறிவிடுகிறான் (5884 கவிஞன். பாத்திரப் படைப்பில் எவ்வளவு நுனுக்கமாகவும், நினைவாற்றலோடும் கவிஞன் பாடுகிறான் என்பதை அறிந்து வியப்படைகின்றோம். முத்தொழிலுக்குப் பதிலாக ஐந்தொழில் என்று கொண்டாலும், பரசுராமனிடம் தன்னை மறைத்துக் கொண்டதை மறைத்தல் என்றும், அவனுக்கு அருள் செய்தமையை அருளல் என்றும் கொண்டால், இராமன் ஐந்தொழில் புரியும் பரம்பொருள் என்பதைக் குறிப்பால் உணர்த்துகின்றான். - - இனி, நான்காவதாக உள்ள தொகுப்பைப் பார்க்க வேண்டும். சந்திரசயிலப் படலம், வரைக்காட்சிப் படலம், பூக்கொய் படலம், நீர்விளையாட்டுப்படலம், உண்டாட்டுப் ப்டலம் முதலிய படலங்கள் காப்பியத்தின் வளர்ச்சிக்கு எந்த வகையிலும் துணை புரியவில்லை என்பது உண்மைதான். இந்த ஐந்து படலங்களையும் எடுத்துவிட்டால் எந்தவிதமான குறைபாடும் இல்லாமல் காப்பியம் நடைபெறும். அப்படியிருக்க மாபெரும் கவிச்சக்கரவர்த்தி ஏன் இந்த ஐந்து படலங்களையும் சேர்க்கவேண்டும் என்று நினைப்பதும் வினாவுவதும் நியாயமானவையே யாகும். இரண்டு காரணங்கள்தாம் சொல்ல முடியும். பிற்காலத்திலே ஒரு காப்பியம் என்றால் காப்பியத் தலைவன் புனல் விளையாட்டு, மலைவளம் காணல் முதலானவை யெல்லாம் இருக்க வேண்டும் என்று இலக்கணம் வகுக்கப் பட்டிருக்கிறது. அந்த இடைக் காலத்தில் தோன்றிய இலக்கணத்தைத் திருப்திப்படுத்துவதற்காகக் கம்பன் பாடினான் என்று சொல்வதிலே ஒரு குறை ஏற்படுகிறது. காப்பியத் தலைவனாகிய இராமன் இந்த ஐந்து படலத்திலும்