பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர்.அ.ச.ஞானசம்பந்தன் 61 மூன்று பேரைத் தன் பிள்ளைகளாகவே கருதவில்லை என்றால், இந்த மாபெரும் குற்றத்திற்கு அவன் தண்டனை அநுபவித்தே தீரவேண்டிய சூழ்நிலை உருவாகின்றது. இனி, அயோத்தியா காண்டத்தின் தொடக்கத்தில் ஒரு பெரிய நிகழ்ச்சி நடைபெறுகின்றது. மந்திரக் கிழவர் அனைவரையும் கூட்டி இராமனுக்கு முடிசூட்ட வேண்டும் என்ற தன்னுடைய எண்ணத்தைத் தசரதன் வெளிப்படுத்துகின்றான். இதற்கு முன்னரே ஒரு காரியத்தைச் செய்துவிடுகிறான். பரதனை அவனுடைய பாட்டன் வீட்டுக்கு அனுப்பிவிடுகிறான். இந்தச் செயல்தான் கொஞ்சம் விந்தையாக இருக்கின்றது. இத்தனை நாளும் பரதனை அவனுடைய பாட்டன் வீட்டிற்கு அனுப்பி வைக்காத தசரதன், அவன் திருமணம் செய்துகொண்டு அப்போதுதான் திரும்பியிருக்கிறான், மனைவியை விட்டுவிட்டுப் பாட்டன் வீட்டிற்குப் போய்வா' என அவனை அனுப்பிவைக்க வேண்டிய சூழ்நிலை என்ன ஏற்பட்டது என்ற சிந்தனை ஒடத்தான் செய்கிறது. நம்முடைய மனத்தில் தோன்றுகின்ற இந்த ஐயத்தினைக் கூனி வெளிப்படுத்துகின்றாள். - “பாக்கியம் புரிந்திலாப் பரதன்தன்னை, பண்டு ஆக்கிய பொலங் கழல் அரசன், ஆணையால் தேக்கு உயர் கல் அதர், கடிது சேணிடைப் - போக்கிய பொருள் எனக்கு இன்று போந்ததால்" (1465) ஏன் பரதனைப் பாட்டன் வீட்டிற்கு அனுப்பினான் தசரதன் என்பது எனக்கு இப்போது புரிந்துவிட்டது. இராமனுடைய பட்டாபிஷேகம் பற்றிப் பேசுகின்ற நேரத்தில் பரதன் இங்கிருந்தால் அது பிரச்சினைக்கு இடமாகும். என்று கருதித்தான் கேகய நாட்டிற்கு அனுப்பினான் என்று சூழ்ச்சிக்காரியாகிய கூனி பேசுகிறாள். அவள் பேசுவதிலும் ஒரளவு நியாயம் இருக்கிறது. மந்திரப் படலத்தில், தன் எண்ணத்திற்குத் தடையாக இருக்கக் கூடியவன் யார் என்று சிந்தித்து, சரதனை அப்புறப்படுத்திவிட்டுத் தசரதன் மந்திராலோசனை நடத்துகின்றான். மந்திராலோசனையின் முடிவில் தசரதனுடைய மனக்கருத்தை அனைவரும் ஏற்றுக்