பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 கம்பன் எடுத்த முத்துக்கள் காட்டாமல், வரமாகப் பெற்றுக்கொள்கின்ற முறையில், தசரதனை ஒரு பெரிய இக்கட்டிலிருந்து கைகேயி காப்பாற்றுகிறாள், என்றுதான் நினைக்கவேண்டியுள்ளது. வாய்மையுடையவன் தசரதன் என்றால், அந்த வாய்மையைக் காப்பதற்கு அவனே முயன்றிருக்க வேண்டும். அவ்வாறு முயலவில்லை என்றால், அவனுடைய மனைவியாகிய கைகேயி அதனை எவ்வாற்றானும் நினைவூட்டி நிறைவேற்ற வேண்டும் என்ற முறையில் அவள் பேசினாளோ என்று நினைக்கத் தோன்றுகிறது. இனி, மந்திரப் படலத்தின் தொடக்கத்தைப் பார்ப்போமேயானால், தசரதனுடைய பாத்திரப் படைப்பை அறிந்துகொள்ள முடிகின்றது. நான்கு பிள்ளைகளைப் பெற்றான் தசரதன். என்றாலும், இராமனைத் தவிர, ஏனைய மூன்று பிள்ளைகளை அவன் நினைவில் கொண்டிருப்ப தாகவே தெரியவில்லை. பால காண்டத்திலேயே இந்தக் குறிப்பை வைத்துக் காட்டுகிறான். கம்பன், உதவியை கேட்க வந்த விசுவாமித்திரன். “நின் சிறுவர் நால்வரினும் * கரிய செம்மல் ஒருவனைத் தந்திடுதி" (324), என்றுதான் கூறினானே தவிர, இராமன்' என்று பெயரிட்டுச் சொல்ல்வில்லை. கரிய செம்மல் என்றால் பரதனும் கரிய செம்மல்தான் என்பதை மறந்துவிடக்கூடாது. அப்படியிருக்க, கரிய செம்மல் என்று விசுவாமித்திரன் கூறியவுடன், இராமனைத்தான் தசரதன் நினைத்தான்ே தவிர, பரதனைப் பற்றி நினைத்ததாகவே தெரியவில்லை. இந்த எண்ணம் அவனுடைய மனத்தில் வேரூன்றி நாளாவட்டத்தில் பெரிய மரமாக வளர்ந்துவிட்டது என்றுதான் நினைக்க வேண்டியுள்ளது. - "மைந்தனை அலாது உயிர் வேறு இலாத மன்னன்" (1514) என்று இந்தக் காண்டத்தில் கம்பன் இதனை நினைவூட்டுவான். நான்கு பிள்ளைகளை உடைய தசரதன், ஒரு பிள்ளையிடத்தில்மட்டும் அன்பு செலுத்தி, ஏனைய