பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர்.அ.சஞானசம்பந்தன் 63 கெடுதல் செய்ய முற்படுகின்றதைக் காணுகின்றோம். தங்களுக்குத் தீங்கு இழைக்கப்பட்டால் அதற்குப் பழி வாங்க வேண்டுமென்ற எண்ணத்தில் தீங்கு செய்வது ஒரு முறை. அதன் மறுதலையாக எவ்விதக் காரணமும் இல்லாமல் பிறருக்குத் தீங்கு செய்தல் என்பது ஒரு சிலரின் படைப்பு ரகசியமாகும். ஷேக்ஸ்பியருடைய மிகப் பிரசித்தி பெற்ற ஒதெல்லோ நாடகத்தில் வருகின்ற அயோகோவைப் போல, உள்ளமும் கோடிய கொடியாள் (1487) ஆகிய கூனி தன் மனத்தே நினைந்து செய்யும் கொடுமை உடையவள் என்று கொள்வதில் தவறு இல்லை. இவள் இந்தக் காண்டத்திலேயுள்ள 2வது படலமாகிய மந்தரை சூழ்ச்சிப் படலத்தில் காணப்படுகிறாள். இந்தப் பாத்திரப் படைப்பு உலகத்திலுள்ள மக்களுள் இப்படியும் ஒரு சிலர் உண்டு என்பதற்கு ஒர் ஒப்பற்ற எடுத்துக்காட்டாக அமைவது தவிர, வேறு ஒன்றும் இல்லை. இவள் கைகேயியினிடம் சென்று, மிக மென்மையாகப் பேசி, அவள் மனத்தைக் கலைத்து, திரித்து, வரங்களின் மூலமாக இராமன் காட்டாட்சியும் பரதன் நாட்டாட்சியும் பெறுமாறு செய்து விடுகிறாள் என்பதோடு இந்தப் படலம் முடிந்துவிடுகின்றது. --~ - - இந்தப் பாத்திரம், இந்தக் காரியத்தைச் செய்தது தவிர, இராம காதை முழுவதிலும் ஒரே ஒரு இடத்தில்தான் தலைகாட்டுகிறது. இராமனை அழைத்துவரப் பரதன் காட்டுக்குப் போகும்போது அனைவரும் அவனுடன் செல்கிறார்கள். கூனியும் செல்கிறாள். சத்துருக்கனன் அவளைத் தண்டிக்கப் புறப்படுகின்றான். ஆனால், பரதன் தடுத்து நிறுத்திவிடுகிறான்' என்ற அளவிலே கூனிப் பாத்திரம் மறைந்துவிடுகின்றது. . . . . . . . . . . .” - இனி கதாநாயகனுடைய தந்தையாகிய தசரதன் இறுதியாக இந்தக் காண்டத்தில் காட்சியளிக்கின்றான். அவன் செய்த செயல்கள் அவனுடைய வாழ்வுக்கு ஒரு முடிவைத் தந்துவிட்டன்' என்று கம்பன் பேசுகின்றான். -