பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர்.அ.க.ஞானசம்பந்தன் 67 கம்பனுடைய பாத்திரப் படைப்பை ஆழ்ந்து சிந்திக்கும் பொழுது கைகேயியை அவன் வேறு வகையில் அமைத்தானோ என்று நினைக்கத் தோன்றுகிறது. இராமன் எப்படி ஸ்திதப்ரக்ஞனாக அமைக்கப்படுகின்றானோ அப்படியே ஒரு ஸ்திதப்ரக்ளு மனோநிலை யுடையவிளாகக் கைகேயியும் படைக்கப்பட்டிருக்கின்றாளோ என்று நினைக்கத் தோன்றுகிறது. நன்மை எது, தீமை எது என்பதை நன்கு அறிந்து கொண்டாள் கைகேயி கூனியினுடைய சூழ்ச்சி, அவள் அந்த அடிப்படையை அறிவதற்கு ஒரளவு துணை செய்தது; அந்த அளவோடு அது நின்றுவிட்டது. தசரதனைப் பொறுத்தமட்டில் ஒரு மாபெரும் தவற்றைச் செய்ய முற்பட்டு விட்டான். இராமனுக்குப் பட்டம் சூட்ட வேண்டும் என்று முடிவு செய்துவிட்டதால், அந்தத் தவறான முடிவை அவன் கைவிட்டா லொழிய அவனுடைய பெயருக்குப் பெருங்களங்கமும் பாவமும் வந்து சேரும். தான் முன்பு சொல்லிய சொல்லை மறந்து இப்போது புதிய ஒன்றினைத் தொடங்கி விட்டான் தசரதன். ஆகவே, அவனை வழி திருப்ப வேண்டும். கம்பனுடைய கைகேயி கன்யா சுல்க்க நிகழ்ச்சியை அடியோடு மறந்து விட்டாள். மாற்றாள் பெற்ற பிள்ளையாகிய இராமனை வளர்க்கத் தொடங்கி, முழு அன்பையும் அவன் மாட்டுச் செலுத்தியதால் சுல்க்க நிகழ்ச்சி அவள் மனத்தில் இல்லை. இராமன் பட்டம் சூட்டிக்கொண்டால் பரதன் செல்வாக்கு இழப்பான். தான் சக்களத்தியிடம் அடிபணிய வேண்டும் என்பதையெல்லாம் கைகேயி ஏற்றுக்கொண்டதாக தெரியவில்லை. இராமன் தன் பிள்ளை (இராமனைப் பயந்த எற்கு என்ற கருத்துடன் வாழும் கைகேயிக்குக் கூனியின் சொற்கள் மனத்தில் பதியவில்லை. ஆழ்ந்து சிந்தித்து, சூழ்ச்சி செய்து தர்க்க ரீதியில் கூனி பேசியவை கைகேயியைப் பாதிக்க வில்லை. இதன் எதிராகப் போகிற போக்கில் "பரதனைப் பாட்டன் வீட்டிற்கு அனுப்பிய காரணம் எனக்கு இப்பொழுது புரிந்துவிட்டது” என்ற கூனியின் சொற்கள்