பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 கம்பன் எடுத்த முத்துக்கள் இத்தகைய குற்றத்திலிருந்து அவன் விடுபட முடியாத ஒரு சூழ்நிலை உருவாகியிருக்கும். இப்பொழுது ஒன்று, தசரதனை அவனுடைய வழிப்படி விட்டு அதனால் வருகின்ற பெருங் குற்றத்தினையும், பழி பாவங்களையும் அவனே ஏற்றுக்கொள்ளச் செய்ய வேண்டும். இல்லையானால் அவன் செய்ய முனைந்த காரியத்தைச் செய்யவிடாமல் தடுத்து அதனால் வருகின்ற பழி பாவங்கள், குற்றங்கள், கெட்ட பெயர் அனைத்தையும் கைகேயி தானே ஏற்றுக்கொண்டு, தசரதனைக் காப்பாற்ற வேண்டும். இந்த இரண்டின் இடைப்பட்டு, இருதலைக் கொள்ளி எறும்பாக இருந்த கைகேயி, ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு ஒரு முடிவுக்கு வருகின்றான் என்று நினைக்கவேண்டியுள்ளது. மந்தரை சொல்லிவிட்டுப் போன பிறகு தசரதன் வருவதற்கு இடைப்பட்ட நேரத்தில் கைகேயியினுடைய மனத் திரையில் இந்த எண்ண ஓட்டங்கள் நன்கு பதிந்திருக்க வேண்டும். வாய்மையும் மரபும் காத்தவனாக' அவனை ஆக்க வேண்டும். பொய் உரையாத புண்ணியனாக அவனை ஆக்க வேண்டும் என்று கைகேயி முடிவுக்கு வந்துவிட்டாள். கற்புடைய மனைவியின் கடமை அது என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை. தற்காத்துத் தற்கொண்டானைப் (குறள்-56 பேண வேண்டிய கடப்பாடு அவளுடையதாக ஆகிறது. தான் எந்த நிலையை அடைந்தாலும், தனக்கு எத்தகைய அவப்பெயர் வந்தாலும், தான் எந்தப் பாவத்திற்குப் போவதாக இருந்தாலும் அதுபற்றிக் கவலைப்படாமல், தன்னைக் கைப் பிடித்தவனாகிய கணவனுடைய குற்றங்களை நீக்கி, அவனுக்குப் பழி வராமல் செய்து அவன் நரகத்தை அடையாமல் செய்யவேண்டியது தன்னுடைய கடமை என்று கைகேயி முடிவு செய்திருத்தல் வேண்டும். இந்த ഗ്ര4ങ്ങഖ அவள் மேற்கொண்ட பிறகு, அந்த முடிவைக கொண்டுசெலுத்துகின்ற முறையில் அவள் ஒப்பற்ற ஸ்திதப்ரக்ளு நிலையில் நின்று கர்மயோகியாகச்