பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 கம்பன் எடுத்த முத்துக்கள் "போயினன் என்றான்; என்ற போழ்தத்தே ஆவி போனான்" . . (1898) என்றுதான் கம்பன் கூறுகின்றானே தவிர, வீடுபேற்றை அடைந்தான் என்று சொல்லவில்லை. ஏன் தெரியுமா? மனத்திலே கைகேயி, பரதன் என்ற இருவர் மாட்டுக் கொண்ட காழ்ப்புணர்ச்சியோடு இறுதிவரையிலும் தசரதன் இருந்து விட்டான். கைகேயி மாட்டுக் கொண்ட காழ்ப்புணர்ச்சியும், பரதன் மாட்டுக் கொண்ட கசப்புணர்ச்சியும் அவனுடைய மனத்தில் நிறைந்திருந்த காரணத்தால்தான் அவன் வீடுபேற்றை அடைய இயலவில்லை. ஆகவே, இந்தக் காழ்ப்புணர்ச்சி அவனிடமிருந்து நீங்கினாலொழிய அவன் வீடுபேற்றை அடைய முடியாது என்ற இந்த நாட்டுக் கொள்கையை வலியுறுத்துவதற்காக, மூல நூலில் இல்லாத ஒரு பகுதியைப் புகுத்துகிறான் கவிச்சக்கரவர்த்தி கம்பநாடன். அனைத்தும் முடிந்து வெற்றி வாகை சூடிய இராமனிடம் தசரதன் வருவதாக ஒரு புதிய காட்சியை உண்டாக்குகின்றான். தசரதன் வந்து, . . "அன்று கேகயன் மகள் கொண்ட வரம் எனும் அயில் . . வேல் இன்றுகாறும் என் இதயத்தினிடை நின்றது, . என்னைக் கொன்று நீங்கலது இப்பொழுது அகன்றது, உன் குலப்பூண் மன்றல் ஆகம் ஆம் காந்த மா மணி இன்று வாங்க" (10068) என்று சொல்லி, நீ வரத்தைக் கேள் என்று சொல்லுகின்றான். அப்போது இராமன் கேட்கின்ற வரம் வியப்பை உண்டாக்குவதாக அமைகின்றது. ஐயா, - - -- "தியள் என்று நீ துறந்த என் தெய்வமும், மகனும் தாயும் தம்பியும் ஆம் வரம் தருக" . . . . (10079) என்று கேட்கின்றான்.