பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர்.அ.ச.ஞானசம்பந்தன் 75 "தீயள் என்று நீ துறந்த என் தெய்வம்" (10079) என்ற வார்த்தைகள் ஆழ்ந்து சிந்திப்பதற்குரியன. தெய்வத்தைப் போல தன்னுடைய நலத்தைக் கருதாமல், பிறருக்காகவே மாபெரும் காரியத்தைச் செய்தவள் கைகேயி என்பதை இராகவன் உணர்ந்த காரணத்தால்தான் "என் தெய்வம்" என்று பேசுகின்றான். அந்தத் தெய்வத்தை உள்ளவாறு உணராமல் ஏசி, காழ்ப் புணர்ச்சியோடு இறந்துவிட்ட காரணத்தால், தசரதனைச் சுட்டிக் காட்டுபவன் போல, "தீயள் என்று நீ துறந்த என் தெய்வமும் மகனும் தாயும் தம்பியும் ஆம் வரம் தருக" (10079) என்று கேட்பதன்மூலம், கைகேயி என்ற பாத்திரத்தைக் கவிச்சக்கரவர்த்தி என்ன அடிப்படையில் படைத்தான் என்பதைப் புரிந்துகொள்ள முடிகின்றது. இராகவனைப் பொறுத்தமட்டில் கைகேயியின் தியாகத்தை நன்கு அறிந்திருந்தான் ஆதலால் அவளைத் தெய்வம் என்று கூறுகின்றான். அந்தத் தெய்வம் தன்னுடைய 35 L. 66) { £ 5ð) fi | நிறைவேற்றுகின்ற முறையில் பேசவேண்டியபொழுது பேசிற்று. கொண்ட கொள்கையில் உறுதிப்பாட்டோடு இருந்தது. கொள்கையை நிறைவேற்றும்பொழுது தனக்கு வருகின்ற பழி பாவம் முதலிய அனைத்தையும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருந்தது. எந்தச் சூழ்நிலையிலும் வாய் திறந்து பேசித் தன்னுடைய பழியைப் போக்கிக்கொள்ள வேண்டு மென்று அந்தப் பாத்திரம் கருதவே இல்லை. அதற்குரிய சந்தர்ப்பங்கள் பல முறை கிடைத்தும் வாய் திறவாமல் இருந்துவிட்ட ஒரே காரணத்தால் இறுதிவரையில் தன்னுடைய கணவனை மாசு மறுவு அற்றவனாக ஆக்க வேண்டுமென்ற தன்னுடைய குறிக்கோளில் வெற்றி பெற்றவளாக ஆகிவிடுகின்றாள் கைகேயி, ஏனையோர் யாருக்கும் தராத அந்தப் பட்டத்தை, இராகவன் கூற்றாகவே அமைக்கின்றான் கவிச்சக்கரவர்த்தி