பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன் 77 முடியும். கொடுமை என்பது நாம் பார்க்கும் பார்வையில் இருக்கின்றதே தவிர, செயலில் இல்லை. இப்பொழுது அவள் வாய் திறவாமல் இருந்திருப்பாளேயானால் தசரதன் பழிக்கு ஆளாவான். வாய் திறந்து பேசியதனால் பழியை அவள் ஏற்றுக்கொள்கிறாள். தன்னுடைய அருள் நிரம்பிய உள்ளத்தால், ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு, கணவனைக் காப்பாற்றுவதுதான் தன்னுடைய கடமை தற்கொண்டா னைப் பேணுவதுதான் தன்னுடைய கடமை கற்புடைய மனைவியின் கடமை என்ற முடிவுக்கு வந்து, ஒப்பற்ற தியாகத்தைச் செய்பவளாக ஒர் உறுதிப்பாட்டோடு செயல் பட்டவளாகத்தான் - இந்தப் பாத்திரத்தை அமைத்திருக்கிறான் கம்பன் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது. கன்யா சுல்க்கக் கதை வெளிப்படையாகக் கம்பனால் பேசப்படாவிட்டாலும், அயோத்தியா காண்டம் முழுவதையும் பார்க்கும்போது இதனை ஏற்றுக் கொண்டுதான் அவன் பேசுகின்றான் என்பதை அறிய முடிகின்றது. கன்யா சுல்க்க நிகழ்ச்சியைத் தசரதன், கைகேயி என்ற இருவர்மட்டும் அறிந்ததோடு அல்லாமல் இராகவனும் அறிந்திருந்தான் என்பதைச் சந்தர்ப்பம் வரும்போது அவன் கூற்றாகவே வைத்துப் பேச வைக்கின்றான் கவிச்சக்கரவர்த்தி: கம்பநா ன் மூல நூலாகிய வால்மீகத்தில் இந்நிகழ்ச்சி இராமனும் பரதனும் காட்டில் சந்திக்கின்ற காலத்தில் பரதனிடம் இராமனே கூறுவதாக அமைந்துள்ளது. பரதன் கூட அதை ஒரளவு அறிந்திருந்தான் என்பதையும் அந்தப் பாடலின் மூலமே தெரிவிக்கின்றான். ஆழ்ந்து சிந்தித்தால், மந்திரப் படலத்தில் வருகின்ற பாடல் இந்தக் கருத்தை வலியுறுத்துவதாக அமைந்திருப்பதைக் காணமுடியும். மைந்தனை அழைத்து நீ இந்த அரசை ஏற்றுக்கொள்ள வேண்டும். நான் தவம் செய்யப் போகிறேன்' என்று 14 பாடல்களில் தசரதன் பேசுகிறான். மூத்த பிள்ளையாகிய இராகவனே பட்டத்தை ஏற்கக் கடப்பாடுடையவன்; இதை உலகம் அறியும்.'மயில் குல முறை என்று சொல்லப்படுகின்ற