பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர்.அ.ச.ஞானசம்பந்தன் 83 கதையை வேறு முகமாக, வேறு விதமாக இங்கே புகுத்துகிறான் கவிச்சக்கரவர்த்தி, அதை நன்கு அறிந்திருந்தவனாகிய இராகவன் பேசுகின்றான். இப்பாடலுக்க பலரும் வேறுவிதமாகப்பொருள் கொள்வர். அதாவது, 'உன் தந்தை கொடுத்த வரத்தின் படி, இத்தரணி உனக்கு என்று இயைந்த விட்டது. இரண்டாவதாக, நீ பிறந்த காரணத்தால் இப்பூமி உனக்கு உரியது என்று பொருள் கூறுவர். ஆழ்ந்து நோக்கினால் இப்பொருள் பொருந்தாமையை அறிய முடியும். மூன்றாவது அடியை முதலில் எடுத்துகொண்டு, நீ பிறந்த காரணத்தால் இப்பூமி உனக்கு உரிமை ஆகிவிட்டபடியாலும், தந்தை உன் தாய்க்கு வரம் என்ற பெயரில் கொடுத்தமையாலும் இந்த பூமி உனக்கு என்று இயைந்து விட்டது. இதில் இரண்டு கருத்துக்கள் பேசப்படுகின்றன. ஏனையோர் பொருள்கொண்டபடி இதற்கு பொருள் கொண்டால், முதலிரண்டு அடியோடு கருத்து முடிந்துவிடும். தந்தை உன் தாய்க்குக் கொடுத்த வரத்தின் அடிப்படையில், இப்பூமி உனக்கென்று இயைந்துவிட்டது என்றுமட்டும் பொருள்கொண்டால், மூன்றாவது அடிக்கு பொருளே இராது. வரத்தினால் இத்தரணி நின்னது என்று இயைந்து விட்டது என்று பொருள் முடிந்துவிடுகிறது. அப்படியிருக்க, நீ பிறந்ததனால் இப்பார் உனக்கு உரிமையாயிற்று என்று சொல்வது அர்த்தமற்றதாகிவிடுகிறது. பார் உனது என்று இயைந்து விட்டது என்று கூறியபிறகு, நீ பிறந்ததால் இப்பார் உனக்கு உரிமையாயிற்று என்று தேவையில்லாமல் கூறுவது கம்பன் பாடலுக்கு பொருத்தமாகாது. பிறந்ததினால் உரிமை வந்தது என்று பேசும் மூன்றாவது அடிதான் உயிர்நாடியாகும். இனி, பரதன் பிறந்ததினாலேயே அவனுக்கு இப்பார் உரிமையாயிற்று என்று இராமன் கூறக் காரணமென்ன? உரிமையாயிற்று என்பதைக் கூறிவிட்டு, அல்லாமலும் தந்தையின் வரம் கொடுத்ததினாலும் இப்பார் உனக்கு இயைந்தது என்று பேசுகிறான் இராமன். நீ பிறந்ததினால் உனக்கு உரிமையாயிற்று என்று பொருள்தரும் மூன்றாவது அடி