பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 கம்பன் எடுத்த முத்துக்கள் கன்யா சுல்க்கம் அல்லது ராஜசுல்கம் என்று வால்மீகி கூறுவதை அடியொன்றிப் பிறந்த ஒரு தொடராகும். வான்மீகத்தில் (தென்பிராந்தியப் பகுதியில் வழங்கும் வான்மீகம்) அயோத்தியா காண்டத்தில் நூற்றி ஏழாவது சருக்கத்தில் மூன்றாவது பாடலாக வரும் சுலோகத்தைக் கவனத்தில் கொள்வது நல்லது "உடன் பிறந்தவனே! நம் தந்தையாகிய தசரதன், உன் தாயாகிய கைகேயியை மணக்கும் பொழுது உன் தாத்தாவாகிய கேகேய மன்னனுக்கு மிக உயர்ந்த ராஜசுல்கமாகக் கொடுக்கப்பட்டது இந்நாடு", கைகேயிக்கு இராஜசுல்கமாகக் கொடுக்கப்பட்ட கோசலம் அவருக்கொரு மைந்தன் (பரதன்) பிறந்த காரணத்தால், தாயின் சுல்கம் அவனுக்கு உரிமையாகிவிடுகிறது. இந்தக் கருத்தைத்தான் கவிச்சக்கரவர்த்தி கம்பநாடன், உரனின் நீ பிறந்த உரிமை ஆதலால்' என்று கூறுகிறான். அப்படியானால் முதல் இரண்டு அடிகளில் தந்தை கொடுத்த வரத்தால் உனக்கு இயைந்தது என்று கூறுவதன் நோக்கம் என்ன? உரிமை என்ற சொல்லுக்கும், இயைந்தது என்ற சொல்லுக்கும் உள்ள மலை போன்ற வேறுபாட்டை மனத்தில் கொள்ளவேண்டும், தந்தை வரங்கொடுக்காவிட்டாலும் இந்தப் பார் உனக்கு வரங்கொடுத்தபடியால் இப்பூமி உனக்குக் கிடைப்பது இன்னும் பொருத்தமாகப் போயிற்று. வான்மீகத்தில் விளக்கமாகச் சொல்லப்பட்ட இப்பகுதியைத் தானும் விளக்கமாகச் சொல்லாமல் உனக்கு உரிமையாய் விட்டது' என்று இராமனைப் பேச வைத்தது கம்பனுடைய அற்புதமான சித்திரமாகும். இதனை விளக்கமாகக் கூறியிருந்தால், சுல்கமாகக் கொடுத்ததைக் கைகேயிக்குத் தெரியாமல் திரும்ப எடுத்து இராமனுக்குக் கொடுத்தான் என்ற அவப்பெயர் தசரதனுக்கு ஏற்பட்டுவிடும். இராமனைப் பெற்றவனுக்கு இப்படி ஒர் அவப்பெயர் வரக்கூடாது என்பதற்காகவே கம்பன் இதனை மறைத்துப் பேசுகிறான். கூனியின் தூண்டுதலின் பேரில் சிந்திக்கத் தொடங்கிய கைகேயிக்குச் சுல்க்கம் நினைவுக்கு வர, அதை நேரடியாகக் கேட்டிருந்தால் அதை மறைத்த தசரதனுக்கு அவப்பெயர் வருமென்ற அச்சத்தால் வரம் என்ற பெயரில்