பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 கம்பன் எடுத்த முத்துக்கள் "அரக்கர் பாவமும் அல்லவர் இயற்றிய அறமும் துரக்க நல் அருள் துறந்தனள்" - என்றுமட்டும் கூறி நிறுத்தாமல் - - - "துமொழி மடமான்" (1484) என்று அவளுக்கு அற்புதமான அடைமொழி சூட்டுகின்றான் கவிச்சக்கரவர்த்தி. எனவே, அவள் கூறிய கடுஞ்சொற்கள் எல்லாம் மேலோட்டமாகப் பார்ப்பதற்குக் கடுஞ்சொல்லாக அமைந்தனவே தவிர, உண்மையில் அவை மாபெரும் தியாகத்தை அடிப்படையாகக் கொண்ட தூய மொழிகள் என்பதை “து மொழி மடமான்" (1484) என்ற சொல்லின்மூலம் பெறவைத்துவிடுகின்றான். ஆக, இந்தக் கன்யா சுல்க்கக் கதையை வெளிப்படையாகச் சொல்லாமல், மறைமுகமாகவே கொண்டுசெல்வதில் இத்தனை பல வெற்றிகளைக் கவிச்சக்கரவர்த்தி பெறுகின்றான் என்பதை நாம் அறியமுடிகின்றது. - இனி அடுத்தபடியாக அயோத்தியா காண்டத்தில் வருகின்ற ஒப்பற்ற பாத்திரம் குகன் என்ற பாத்திரமாகும். இந்தப் பாத்திரத்தை வால்மீகியை அடியொற்றிப் படைத்திருந் தாலும், ஈடு இணையற்ற முறையில் உலக இலக்கியத்தில் காணமுடியாத அளவுக்கு அற்புதமான ஒரு படைப்பாகக் குகனைப் படைத்துவிடுகிறான் கவிச்சக்கரவர்த்தி, இப்படி ஒர் அன்பின் வடிவாகவுள்ள பாத்திரத்தைப் படைத்ததன் மூலம் அன்பு வழி செல்கிறவர்களுக்கு கல்வி, கேள்வி முதலிய கலையுணர்வு தேவையில்லை என்பதையும் வைத்துக் காட்டுகிறான் கவிச்சக்கரவர்த்தி. தாயினும் நல்லானாக ஒரு பாத்திரத்தைப் படைத்துக் காட்டுவதன் மூலம் அயோத்தியா காண்டத்தில் ஒரு சிறந்த பாத்திரமாக அமைந்துவிடுகிறான் குகன். - அதுமட்டு மல்ல, ஆழ்வார்கள் பாடலில் ஆழங்கால்பட்ட வனாகிய கவிச்சக்கரவர்த்தி வான்மீகத்தில் இல்லாத சில