பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர்.அ.ச.ஞானசம்பந்தன் 87 பகுதிகளைப் புகுத்தும்போது ஆழ்வார் பாடலில் ಹTಣಬJ೬ஒன்றைத் தனக்கு முன்னோடியாக எடுத்துக்கொள்கிறான். ஏழை ஏதலன் கீழ் மகன் என்னாது இரங்கி மற்று அவற்கு இன்னருள் கரந்து, 'மாழை மான் மடநோக்கி உன் தோழி; உம்பி எம்பி' என்று ஒழிந்திலை உகந்து, தோழன் நீ எனக்கு இங்கு ஒழி, என்ற சொற்கள் வந்து அடியேன் மனத்து இருந்திட, ஆழி வண்ண நின் அடியினை அடைந்தேன் அணி பொழில் திரு அரங்கத்து அம்மானே! - (நாலாயிரம் 14:18) என்ற ஆழ்வாரின் பாசுரத்தை மனத்தில் வைத்துக்கொண்டு, பிராட்டியைக் குகனுக்கு அறிமுகம் செய்துவைக்கிறான் இராகவன் என்ற ஒரு நிகழ்ச்சியை உண்டாக்கி, படகிலே சென்றபோது சீதையைக் காட்டி இவ ஒ உன் கொழுந்தி, எனவும், இலக்குவனைக் காட்டி இவன் உன்தம்பி, எனவும் இராமன் அறிமுகம் செய்துவைப்பதாக ஒரு நிகழ்ச்சியைக் கம்பன் படைக்கிறான். "இளவல் உன் இளையான்இந் . நன்னுதலவள் நின் கேள்" (1994) என்பதாகப் பிராட்டியை அறிமுகம் செய்து வைக்கப்படுகின்ற - அரச குடும்பத்தை அல்லாத பாத்திரங்களில் தன்னந்தனியாக நிற்பவன் குகப்பெருமான். இந்த நிகழ்ச்சியைப் பின்னர்க் கேள்விப்பட்டனனாகிய பரதனும்கூட, • , - "இன் துணைவன் இராகவற்கு இலக்குவற்கும், இளையவற்கும், எனக்கும் மூத்தான்" (2367) என்று குகனைக் கோசலைக்கு அறிமுகம் செய்துவைக்கின்ற போது அன்பின் வடிவாகவே இருக்கின்ற பாத்திரம் எவ்வளவு எளிதாகச் சக்கரவர்த்தி குடும்பத்தில் உறவு வைத்துக்