பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 கம்பன் எடுத்த முத்துக்கள். கொள்கிறது என்பதை எடுத்துக்காட்டுகின்ற முறையில் அமைத்து விடுகிறான். : - குகன் இராமனை முதன்முதலில் காண வருகின்றபோது தேனும் மீனும் திருத்திக் கொணருகிற காட்சி வான்மீகத்தில் இல்லாத முறையில் இங்கே கம்பன் புகுத்துகிறான். அவனைப் பொறுத்தமட்டில் உணவு என்பது தேனில் ஊறவைத்த மீனாகும். அந்த உணவைக் கொண்டுவரும்போது இராகவன் அதை உண்பானா, மாட்டானா என்ற ஆராய்ச்சிக்கே இடமில்லை. அங்கே தன்னுடைய எல்லையில் நின்று தான் உண்ணுகின்றதை இறைவனுக்குப் படைப்பதுபோல அவன் கையில் கொண்டுவருகின்றான். . - - "தேனும் மீனும் அமுதினுக்கு அமைவது ஆகத் திருத்தினென் கொணர்ந்தேன் என்கொல் திருவுளம்?" . . . . . (1966) என்று பேசுகின்றான் குகன். நான் கொண்டுவந்திருக்கிறேன். உன்னுடைய விருப்பம் எதுவோ அதன்படி செய்வாயாக' என்று அந்த உரிமையை இராகவனுக்கே கொடுக்கிறான். ஏனையோர் அதனைப் பார்த்து முகம் சுளிக்கிறார்கள். இராகவனைப் பொறுத்த மட்டில் அதை முழு அன்பின் வடிவாக வந்ததாக ஏற்றுக்கொள்கிறான். சர்க்கரையால் செய்யப்பட்ட மிளகாய் எப்படி உறைக்காமல் இனிக்குமோ அதுபோல் "நீ கொண்டு வந்த இந்தத் தேனும் மீனும் அன்பு என்ற ஒன்றினாலே முற்றிலும் சமைக்கப்பட்டுவிட்டது." . . . . . "பரிவினில் தழீஇய என்னின் பவித்திரம்" (1967) யாக குண்டத்தில் சொரியப்படுகின்ற அவிஸ் மிக உயர்ந்த தாகும் என்று இராகவன் பேசும்போது குகனுடைய அன்பைப் பரிபூரணமாக அறிந்து ஏற்றுக்கொண்டவனாகிறான். இப்படி ஒரு பாத்திரத்தைத் . . . . . . "தன்பரிசும் வினை இரண்டும் சாரும்மலம் மூன்றும்அற அன்புபிழம்பாய்த் திரிவார்" (பெ. 803)