பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர்.அ.ச.ஞானசம்பந்தன் 91 பண்பு நலன்களை யெல்லாம் அறிந்துகொண்டவனாக . தன்னுடைய நுண்மாண்துழைபுலம் காரணமாக அற்புதமாக எடைபோட்டு „o; "ஆயிரம் இராமர் நின் கேழ் ஆவரோ, தெரியின் அம்மா!" (2337) என்று சொல்லுகின்ற அளவுக்குப் பரதனை உயர்த்தி விடுகின்றான் என்பதை அறிய முடிகின்றது. ஆக, அயோத்தியாகாண்டத்தில் வான்மீகத்தி லிருந்து கொஞ்சம் மாறுபட்ட முறையில், ஈடு இணையில்லாப் பாத்திரமாக தமிழகத்தில் முதன்முதலாகக் காணப்பட்ட பக்தி இயக்கத்தின் அல்லது அன்புவழி இறைவழிபாட்டின் அடிப்படையில் குகன் என்ற ஒரு பாத்திரத்தைப் படைத்துக் கம்பன் அதில் முழு வெற்றி அடைகின்றான் என்பதை அறிய முடிகின்றது. - இனி அடுத்தபடியாக அயோத்தியா காண்டத்தில் எஞ்சி நிற்கின்ற பாத்திரம் பரதனாவான். முதல் மூன்று நான்கு படலங்கள் தாண்டி, பள்ளிபடைப் படலத்தில்தான் பரதனைச் சந்திக்கின்றோம். பாட்டன் வீட்டில் இருந்த அவனைத் தூதுவர்கள் சென்று அழைத்துவருகின்றார்கள். அயோத்திக்குள் நுழைகின்ற வரையில் தவறு ஏதும் நிகழநததாகப பரதனுக்குத் தெரியவேயில்லை. ஊருககுள நுழைந்ததும் ஒளி இழந்து நிற்கும் ஊர் நிலை கண்டு ஆச்சரியப்பட்டு, நேரே தசரதனைக் காணச் செல்கின்றான். தசரதன் இல்லாதபோது தாயைக் கண்டு விசாரிக்கின்றான். அப்போதுதான். தந்தை 'வானத்தான் என்றும் அண்ணன் 'கானத்தான் என்றும் அறிந்துகொள்ளுகின்றான். இந்த நிலையில் பரதனிடமிருந்து வருகின்ற ஆவேசமான சொற்கள் அவனுடைய இயல்புக்கு மாறுபட்டவை. அதற்குரிய காரணம் வேறு எதுவும் இல்லை. தாய், தந்தை, குரு, தெய்வம் ஆகிய அனைவரும் இராமனே என்று நினைக்கின்ற பரதனுக்கு இராமன் கானம் போயினான் என்று கேள்விப்பட்டவுடன் எல்லையில்லாத சினம் வருவது நியாயமானதாகும். அதுமட்டுமல்ல.