பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 கம்பன் எடுத்த முத்துக்கள் ஒரு வழியில் நான் கானகம் சென்று அண்ணனை அழைத்துவரப் போகின்றேன். எல்லோரும் புறப்படுக என்று ஆணையிடுகின்ற அளவுக்கு அவன் போவான் என்று யாரும் நினைத்ததாகத் தெரியவில்லை. அவன் இந்த முடிவுக்கு வந்தபோது அயோத்தியா நகரம் முழுவதும் அவன் மாட்டு எல்லையற்ற மதிப்பும், மரியாதையும் கொண்டதாகப் புலப்படுவதைக் காணுகின்றோம். பரதன் புறப்பட்டுச் செல்கின்றான். குகனைச் சந்திக் கின்றான். அந்தச் சந்திப்பு எவ்வாறு நிகழ்ந்தது என்பதை முன்னரும் பார்த்தோம். குகன் இவனை அறிந்துகொள்வதற்கு வாய்ப்புகள் கிடைத்தபோது - "ஆயிரம் இராமர் நின் கேழ் ஆவரோ?" (2337) என்று குகனால் பாராட்டப்படுகின்ற அளவுக்குப் பரதனுடைய பண்பாடு வெளிப்படுகின்றது. இனி, பரத்துவாசனுடைய ஆசிரமத்தில் படைகள் எல்லாம் விருந்துண்ண, காயும் கனியும் கிழங்கும் அருந்தித் தரையிலே படுத்துத் தன்னுடைய அண்ணன் மேற்கொண்ட தவத்தைத் தானும் மேற்கொண்டவனாகப் பரதன் காட்சி யளிக்கின்றான். சித்திரகூடத்தை நெருங்குகின்ற காலத்தில் அங்கே படைகள் வரும் தூசிப்படலத்தைப் பார்த்து இலக்குவன், 'பரதன் போருக்கு வருகிறான்' என்று சொல்லி யுத்த சன்னத்தனாகிறான். அப்போது இராகவன் புன்சிரிப்போடு அவனைப் பார்த்துப் பேசுகிறான். ஐய! நீ என்ன நினைத்தாய் பரதனைப் பற்றி, சற்றுப் பொறுத்துப் பார் என்று சொல்லுகின்றான். அப்போது படைகளை எல்லாம் ஓர் எல்லையில் நிறுத்திவிட்டு, தவக் கோலத்தோடு நடந்து வருகின்ற பரதனைப் பார்த்தபோது இலக்குவன் ஆடிப்போகிறான். - நெருங்கி வந்த பரதனுக்கும் இராமனுக்கும் நடைபெறு ன்ற உரையாடலில் இருவரைப் பற்றியும் அறிந்துகொள்ள