பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை-2.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

эйшейт – «РФ «Qрғылшй шптіsos» —- ~} +bofkипчай 584 -வரம் பெர்ம் முத்தம்” என்றும் "பரம்பெலாம் பவளம்" என்றும் கம்பன் கூறும் போதும் முத்துக்களும் பவளங்களும் தமிழ் நாட்டிற்கே உரித்தானது என்பதை நினைத்தே கூறியுள்ளார். “முந்து முக்கனியும்” என்று கம்பன் கூறுகிறார். முக்கனி என்பது தமிழ் நாட்டிற்குரிய மா,பலா,வாழையாகும். இதை உணர்த்துவதாகவே கம்பன் முக்கனி என்று குறிப்பிடுள்ளார். தாடகை வசித்து வந்த பாலைவனத்திற்கு இராம இலக்குவர்களை அழைத்துச் கொண்டு விசுவாமித்திர மாமுனி வந்தார். அந்த இடத்தின் வரலாற்றைப் பற்றி முனிவன் அரச குமாரர்களிடம் எடுத்துக் கூறுகிறான். அது அகத்தியன் தவம் செய்த இடம். அகத்தியன் சாபத்தால் தாடகையும் அவளுடைய மைந்தர்களும் அரக்கர்களாயினர் இதைப் பற்றிக் கம்பன் “தமிழ் எனும் அளப்பரும் சலதி தந்தவன் உமிழ் கனல் வழி வழி ஒழுக, உங்கரித்த அழிவன செய்தலால் அரக்கர் ஆகியே இழிகென உரைத்தனன் அசரி எஞ்சவே” என்று கூறுகிறார். இதில் தமிழ் எனும் அளப்பரும் சலதி தந்தவன் என்று அகத்தியனைப் பற்றிக் கம்பன் மிகச் சிறப்பாகக் குறிப்பிடுகிறார். இங்கு அளவிட முடியாத ஆழமும், அகலமும் காண முடியாத பெருங்கடலைப் போன்ற தமிழ் மொழியையும் அம்மொழிக்கான இலக்கணத்தையும் வகுத்தவன் என்று பெருமையோடு கம்பன் அகத்திய முனியைக் குறிப்பிடுவதைக் காண்கிறோம். விஸ்வாமித்திரன் தனது வேள்வியை முடித்துக் கொண்டு இராம இலக்குவர்களைத் தன்னுடன் மிதிலையை நோக்கி அழைத்துச் செல்கிறான். வழியில் கங்கை நதியைக் காண்கின்றனர். கங்கை நதியின் சிறப்பு பற்றி முனிவரிடம் இராமன் கேட்கிறான். கங்கையின் சிறப்பைப் பற்றிக் கூறும் போது அது காவிரியைப் போல இருந்தது என்று முனிவன் கூறுவதைக் கம்பன் குறிப்பிடுகிறார். இது கம்பருடைய கவிதை வரிகள்.