பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை-2.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. கம்பனும் தமிழும் 583 “முத்தமிழ் துறை போகிய உத்தமக் கவிஞர்க்கு ஒன்று உணர்த்துவன் பித்தர் சொன்னவும் பேதையர் சொன்னவும் பத்தர் சொன்னவும் பன்னப் பெருபவோ” முத்தமிழ்த் துறையின் முறை போகியவர்களை உத்தமக் கவிஞர்கள் என்று கம்பன் குறிப்பிட்டிருப்பது, அவர் தமிழுக்குக் கொடுக்கும் சிறப்பாகும். தமிழ் மீதுள்ள தமிழ்ப் பற்றினால் பெரு மதிப்பினால் முத்தமிழ் அறிந்தவர்களை உத்தமக் கவிஞர் என்று சிறப்பாகக் குறிப்பிடுகிறார். கம்பன் தமிழ்ப் பாவினால் இராமாயணத்தை உணர்த்திய பண்பு மிகச் சிறந்த பண்பாகும். “தேவ பாடையில் இக்கதை செய்தவர் மூவர் ஆனவர் தம்முளும் முந்திய நாவினார் உரையின் படி நான் தமிழ்ப் பாவினால் இது உணர்த்திய பண்பு அரோ!” என்று தமிழைச் சிறப்பித்துக் கூறுகிறார். கம்பன் கோசல நாட்டின் சரயு நதியின் சிறப்பைப் பற்றிக் கூறும் போது, o “முல்லையைக் குறிஞ்சி யாக்கி மருதத்தை முல்லையாக்கி புல்லிய நெய்தல் தன்னைப் பொரு அறு மருதம் ஆக்கி” என்று குறிப்பிடுகிறார். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்று நிலத்தை நால்வகையாகப் பிரித்து அவைகளின் வளத்தையும் வனப்பையும் மக்களையும் அவர்களின் பண்புகளையும் ஆராய்வது தமிழ்ப் பண்பாடாகும், தமிழ் மரபாகும். வால்ஷியில் இது வழக்கமில்லை.