பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை-2.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. கம்பனும் அரசியலும் Հ05 அறிந்து தெய்வவான் படைக்கலம் தொடுப்பதற்கு அமைந்தான் பிரிந்து போவதே கருமம் இப்பொழுது எனப் பெயர்ந்தான் செறிந்த தேவர்கள் ஆவலம் கொட்டினர் சிரித்தார்.” என்று இந்திர சித்தன் பிரம்மாஸ்திரத்தைத் தொடுப்பதற்கான தயாரிப்புகளைச் செய்வதற்காகப் போர்க்களத்தைவிட்டு மறைந்து போனதைப் பற்றிக் கம்பன் குறிப்பிடுகிறார். இங்கு பிரம்மாஸ்திரம் தொடுப்பது பற்றியச் செய்தி விவாதத்தில் வந்திருக்கிறது. பிரம்மாஸ்திரம் என்பது மிகவும் வல்லமைமிக்க ஒரு சக்தி ஆயுதமாகும். அந்த ஆயுதம் அழிவு சக்தி அதிகம் கொண்டதாகும். போரில் அந்த நான்முகன் படையைப் பயன்படுத்தவது என்பது பொதுவாகக் கடைசி ஆயுதமாகவே பயன்படுத்தப்படுவதற்கு ஆலோசிக்கப்படுகிறது. பிரம்மாஸ்திரத்தை ஒரு முறை பயன்படுத்திவிட்டால், அதை மீண்டும் பயன்படுத்த முடியாது. இந்திரசித்தனுடைய போர் மிகவும் கடுமையானபோது, அவன் மீது பிரம்மாஸ்திரத்தைப் பயன்படுத்த வேண்டுமென்று இலக்குவன் இராமனிடம் அனுமதி கேட்கிறான். ஆனால் இராமன், அதனால் அழிவு அதிகமாகும் என்று கூறி வேண்டாமெனச் சொல்லி விடுகிறான். இங்கு இராமனிடம் உள்ள மனிதாபிமான உணர்வு தெளிவாக வெளிப்படுகிறது. ஆனால் இந்திரசித்தனோ எந்த அழிவு, நாசத்தைப் பற்றியும் கவலைப்படாமல் அரக்க குணம் கொண்டு, அந்தப் பேராயுதத்தைப் பயன்படுத்த முனைகிறான். இந்தப் பிரச்சினை போர் அரசியலில் முக்கியமான ஒன்றாகும். இந்திரசித்தனுடைய போர் மறுநாள் தொடருகிறது. இராவணன் தனது முதலமைச்சனான மகோதரனையும் அகம்பனையும் போர்க்களத்திற்கு அனுப்புகிறான். அனுமன் அகம்பனை அடித்துக் கொன்றான். இலக்குவன் மகோதரனை எதிர்த்துப் போரிட்டான். அப்போரில் இலக்குவன் மகோதரன் மீது சிவக்கனையை ஏவினான். அதைக்கண்டு மகோதரன் மாயமாக மறைந்து வேறு வடிவம் எடுத்துப் போரிட்டான்.