பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை-2.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. கம்பனும் அரசியலும் 5|| “வாய்மடித்து இரண்டு கையும் முறுக்கித்தன் வயிரச் செங்கண் தீஉகக் கனகக் குன்றின் திரண்ட தோள் மழையைத் தீண்ட ஆயிரம் கோடியானைப் பெரும்பிணைத்து அமளி மேலான் காய்சினத்து அனுமன் என்னும் கடல் கடந் தானைக் கண்டான்” என்று கம்பன் குறிப்பிடுகிறார். வீடணன் அனுமனைத் தட்டி எழுப்பினான். அவனைக் கட்டித் தழுவிக் கொண்டான். எப்படியிருக்கிறாய் என்று கேட்டு, அவன் வலுவாக இருக்கிறான் என்பதைக் கண்டுக் கவலையிலும் மகிழ்ச்சி கொண்டான். "அழுகையோடு உவகையுற்ற வீடணன் ஆர்வம் கூரத் தழுவினான், அவனைத்தானும் அன்பொடு தழுவித்தக் கோய் வழுவினான் அன்றே வள்ளல் ”, என்றனன் வலியன் என்றான் தொழுதனன் உலகம் மூன்றும் தலையின் மேல் கொள்ளும் தூயான்.” வீடணனும் அனுமனும் சேர்ந்து சாம்பவனைத் தேடிச்சென்று பார்த்தனர். மூவரும் கலந்து ஆலோசனை செய்தனர். இராமனும், இலக்குவனும் இதர வானரப்படைகளும் உயிர்பெற்று எழச் சஞ்சீவி மலையில் உள்ள உயிர் காக்கும் இலைகளை (மூலிகைகளை)க் கொண்டு வர வேண்டும் என்று அனுமனிடம் மற்ற இருவரும் கூறினார்கள். வெகு வேகமாக வடக்கு நோக்கிச் சென்று வடதுருவத்தில் உள்ள மருத்துவ மலையைக் கொண்டு வர வேண்டும் என்று கூற அனுமன் வாயு வேகத்தில் புறப்பட்டான். "மாண்டாரை உய்விக்கும் மருந்தொன்றும் மெய்வேறு வகிர்களாகக் கீண்டாலும் பொருந்துவிக்கும் ஒரு மருந்தும்