பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை-2.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

зьшивот — 5205 осідзнтили цтварви — 9. ствоівалавії 54() இவ்வாறு இந்திரசித்தன் வீரத்துடன் தனக்கு ஈசன் கொடுத்த தேர் மீது ஏறிப் போருக்குப் புறப்பட்டான். பலவித மாயங்களையும் செய்து போர் செய்தான். தரையிலிருந்தும் ஆகாயத்தில் இருந்து கொண்டும், மறைந்து நின்றும் மாயமாக நின்றும் போர் செய்தான். அவன் செய்த மாயங்களைப் பற்றியெல்லாம் விடணன் இலக்குவனுக்கு எடுத்துக் காட்டி உதவி செய்தான். “தேரினைக் கடாவி வானில் செல்லினும் செல்லும் செய்யும் போரினைக் கடந்து மாயம் புணர்க்கினம் புணர்க்கும் போய் அக் காரினைக் கடந்து வஞ்சம் கருதினும் கருதும் காண்டி விர மெய்ப் பகலின் அல்லால் விளிகிலன் இருளின் வெய்யோன்” வானில் செல்வான், மாயம் செய்வான், போர் நெறி முறைகளை மீறி வஞ்சகம் செய்தும் போர் செய்வான். இவனை இரவில் வெல்ல முடியாது. பகலில்தான் இறப்பான் என்றும், 'ஆர் அழியாத சூலத்து அந்தணன் அருளின் ஈந்த தேர் அழியாத போதும் சிலை காத்து இருந்த போதும் போர் அழியான் இவ்வெய்யோன் புகழ் அழியாத பொற்றோள் விர, இது ஆணை என்றான் வீடணன் விளை வது ஒர்வான்.” நான் முகனும், சிவனும் கொடுத்த வலுவான படைக் கலன்களையும் தேரினையும் கொண்டவன், அந்த ஆயுதங்களையும் தெய்வ தேரினையும் மிகவும் திறமையுடன் பயன்படுத்தி போர் புரியவல்லவன் என்றும் இந்திரசித்தனுடைய போர்த் திறன்களைப் பற்றிய இரகசியங்களையெல்லாம் வீடணன் இலக்குவனுக்கு எடுத்துக் கூறுகிறான். இவையெல்லாம் இலங்கை அரசியலின் ஒரு பகுதியாகும் என்பது கம்பன் கவிதைகளிலிருந்து நமக்குப் புலப்படுகிறது.