பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை-2.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. கம்பனும் அரசியலும் 545 இங்கு இராவணனுடைய சிந்தனைப் போக்கில் ஒரு முக்கியமான செய்தியைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்திரசித்தன் போர்க்களத்தில் கொல்லப் பட்டான் என்று கேள்விப் பட்டவுடன் இராவணன் உணர்ச்சி வேகப்பட்டுச் சீதையைக் கொல்வேன் என்று வாளை உறுவுகிறான். பொதுவாக அரசியல் தலைமையில் உள்ளவர்களிடம் அதிகாரவர்க்க தோரணையும், தன்ன கங்காரப் போக்கும் நிலவுமானால் அவர்களுடைய அரசியல் வழி முறையும் புற நிலையாக உண்மை நிலைக்கு உட்பட்டதாக அமையாது. அதில் அகநிலை (தன்னிலை) உணர்வே ஆதிக்கம் செலுத்தும், மேலோங்கி நிற்கும், எனவே அவர்களும் கூட உணர்ச்சி வசப்படுவார்களானால் அதனால் வேண்டத்தகாத கீழ் நிலையிலான விளைவுகளே ஏற்படும். இராவணனிடம் இந்திரசித்தன் சீதையை விட்டுவிடும்படி கூறியபோது அவன் உயர்ந்தத் தத்துவ நிலையில் பேசினான். சீதையை விட்டு விடும்படி இலங்கையில் பலரும் இராவணனிடம் எடுத்துக் காட்டியுள்ளார்கள். மாலியவான், வீடணன், கும்பகருணன், கடைசியாக இந்திரசித்தனும் கூறினான். இதில் ஒவ்வொரு கட்டத்திலும் இராவணனுடைய உணர்வு நிலை சீதையின் பால் உள்ள ஆசை குறையவில்லை. மற்றவர்கள் கூறிய அறிவுரைகளை இராவணன் ஏற்கவில்லை. ஆயினும் தொடர்ச்சியாக இராவணன் அணிக்குத் தோல்விகள் ஏற்பட்ட போது அத்துடன் இந்திரசித்தனும் கொல்லப்பட்ட போது தனது தோல்வி நிச்சயம் எனத் தெரிந்த போது உணர்ச்சி வசப்பட்டுச் சீதையைக் கொல்லக் கைவாளை உறுவுகிறான். அந்த நேரத்தில் முதலமைச்சன் மகோதரனுடைய தலையீடு முக்கியமாக அரசியல் தன்மை கொண்டதாகப் புறநிலையான சிந்தனை கொண்டதாக அமைந்துள்ளதைக் காண்கிறோம். மகோதரன் இராவணனுடைய முதல் அமைச்சன் என்னும் முறையில் இலங்கையின் அரசியலில் மிகுந்த செல்வாக்கு உள்ளவன். இராவணனுடைய சிந்தனை அலைகளுக்கும், இலங்கையின் கெளரவத்திற்கும் அந்தஸ்திற்கும் இணையாக, இசைவாக இராவணனுக்கு ஆலோசனை கூறுவதில் மகோதரன் இலங்கைக்கு ஏற்ற சிறந்த அமைச்சனாகவே இருந்து வந்துள்ளான். எனவே கடைசி வரைப் போரை நடத்தி அதன் வெற்றி தோல்விகளைப்